பக்கம்:பாரதீயம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாரதீயம்

பாரதியார் மரபுக் கவிதைகளை எளிமையாக்கினதோடன்றி வசன கவிதைகளையும் எழுதித்தமிழில் புதிய கவிதைச் சோதனைகளை மேற்கொண்டார்; செய்யுள் வடிவ உடைப்பை மேற்கொண்டுட முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருவதுபோல்-வசன கவிதைகளை எழுதி வெளியிட்டார். இதனைத் தெளிவுறுத்தும் போக்இல்,

1.ண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்த காவல் நிலையம்..... 5

புதுக்கவிஞர் ஒருவர் கிண்டல் செய்கின்றார். இன்னொரு புதுக் கவிஞர் முத்தொள்ளாயிரப் பாணியில்,

அன்று மணிக்கதவை தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும் செய்தார் மாறிமாறி: எனறும் புலவர் அடைப்பு கவிஞர் திறப்பார்ே

என்று இந்நிலையைக் காட்டுவார். புலவர் அடைத்த கவிதைத் திருக் கதவத்தைக் சவிஞர் வந்து திறக்கும் புதுமுயற்சியாகத் தமிழ் வசன கவிதை முயற்சிகள் அமைந்தன என்பது இக்க விஞர் பெறவைக்கும் குறிப்பாகும். - - -

பாரதியின் வசன கவிதைகள் : பாரதியார்தான் முதன் முதலாக மேனாட்டார் பாணியில் வசன கவிதையைத் தோற்று வித்தவர். இவரைத் தமிழில் வசன கவிதையின் தந்தை என்று கூறுவ திலும் தவறு இல்லை. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்றவற்றை எடுத்துக்காட்டிப் பாரதிக்கு முன்னர் - மிகப் பண்டைக் காலத்திலேயே - வசன கவிதை இருந்துள்ளது என்று நிலைநாட்ட முயல்வது பொருத்தமன்று. ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வேறு; வசன கவிதை’ வேறு. செய்யுளின்

5. கவிஞர் வாலி : பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி

விடுமுறைச் சிறப்பு ம்லர்-1981) 6. மணி, சி : வரும் போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/136&oldid=681158" இலிருந்து மீள்விக்கப்பட்டது