பக்கம்:பாரதீயம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 பாரதீயம்

வசன கவிதையா என்பதை ஆராய்வோம். அதற்கு முதலாக, ரசிகமணி டி. கே. சியின் கவிதைபற்றிய கருத்தினைக் காண்போம்.

கவி(தை) என்றால் இன்னதென்று சொல்வதற்கு இலக் கணம் கிடையாது. உலகத்தில் எங்கும் கிடையாது. யாப்பியல் இந்த விஷயத்தில் எந்த உதவியும் புரியவில்லை. வெண்பா இது விருத்தம் இது என்று ஏதோ சொல்லலாம். ஆனால், கவி இது என்று சொல்லவே முடியாது. ஒரு பாஷையோடும் அதி லுள்ள சிறந்த கவிகளோடும் உண்மையான ஆர்வத்தோடு படாடோபத்தையெல்லாம் தூரத்தே விட்டுவிட்டு நெடுநாள் பழகி வருவோமானால் அது தெரியவரலாம்.”

இதிலிருந்து யாப்பமைதி வேறு, கவிதையின் வடிவ அமைதி வேறு என்பதை டி. கே. சி. அவர்களின் கருத்து தெளிவுறுத்துகின்றது. எனவேதான் வசன கவிதையைப் படைப்போர் இலக்கணம் வேறு, கவிதை வேறு என்பதை உணர்ந்து யாப்பைப் புறக்கணித்தனர்.

கவிதையின் சுருதி வேறு; வசனத்தின் சுருதி வேறு. தீ இனிது: என்பதில் இனிது என்ற சொல் சுவையை (நாக்கின் செயலை)ச் சார்ந்தது. தீ சுடும் என்பதில் சுடும்’ என்ற சொல் (நொப்புல செயலைத்) ஊற்றுணர்வைத் தெரிவிக்கின்றது. தீ சுடும் என்ற தொடர் அறிவோடு பேசுகின்றது. தி இனிது என்ற தொடர் உணர் வோடு பேசுகின்றது. எனவே, முன்னது வசனம்; பின்னது கவிதை. சொற்றொடர் வெறும் செய்தியை மட்டிலும் சொல்லாமல், உவமை யைப்போல் உணர்வினிடம் பேசுமானால் கவிதை பிறந்துவிடுகின் றது. தீ இல்லை என்றால் ஊன் ஏது? உலகு என்பது நிலைபெற முடி யுமா? அதனால்தான் தி இனிது என்பதை உணர்ச்சி ஒப்புக் கொள்ளுகின்றது. ஒரு பொறிக்கு உரித்தான தொழிலைப் பிறி தொரு பொறியின்மீதேற்றிக் கவிதையின் சிறப்பைக் காட்டும் கற். பனை உத்தி இங்குக் கையாளப்பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். பிறிதோரிடத்தில்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே”.

என்று பாடுகின்றார் பாரதியார். இயற்கையாகச் சுவையை நாக்கின் மூலமே உணர்கின்றோம். காதின் மூலம் இந்தச் சுவையை உணர லாம் என்பது இயற்கைக்கு முரண்பட்டது. ஆனால், நாக்கின் தொழிலைக் காதின் மேலேற்றிக் கூறும் திடுக்கிடும் அநுபவம் தன்

8. கே. சி. மொழிகள்ட் தீபம், செப். 1972. 9. தே.கி.--செந்தமிழ்நாடு- 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/138&oldid=681160" இலிருந்து மீள்விக்கப்பட்டது