பக்கம்:பாரதீயம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பாரதீயம்

மிக்க கவிஞனுக்குச் செய்யுளில் கவிதை கிடைக்கும்; வசனத்திலும் கவிதை கிடைக்கும். இன்று மரபுக் கவிதையாளர்கள் எழுதும் புதுக் கவிதைகளில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். ஊன்றி நோக்குவார்க்கே இது தட்டுப்படும்.

செய்யுள், உரைநடை என்ற இரண்டிலும் கவிதை தென்படும் என்பது உண்மையேயாயினும், கவிதையின் கருப்பொருளுக்கிணங்கத் தான் மேற்கொள்ள வேண்டிய சாதனத்தை அறுதியிட்டுக்கொள் கின்றான் கவிஞன். கவிஞன் மேற்கொள்ளும் சாதனம் செய்யுளா வசனமா என்று அலட்டிக்கொள்ளாமல், இவை இரண்டுமே உண்மை யான கவிதையின் வடிவம் என்று கொள்ளல் வேண்டும். பாரதியார் மரபுக் கவிதை வடிவத்தில், பல்வேறுவித சந்த நயத்தில், கவிதை களைப் படைத்தார்; இசைக் கவிதைகளையும் படைத்துப் புகழ் பெற்றார். வசன கவிதைகளையும் சோதனையாக எழுதி அவற்றி லும் வெற்றி பெற்றார்.

உடல் கன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவை யுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வும் அமுதம். உணர்வே அமுதம்.

உணர்வு தெய்வம்...

என்பது இன்பம் என்ற தலைப்பில் காணப்படும் வசன கவிதை.

இதனை மீண்டும் மீண்டும் படித்தால் கவிதை தட்டுப்படும்.

தேனாகவும் அமுதமாகவும் இனிப்பதையும் உணரலாம். இந்த உணர்

வில் தெய்வமும் காட்சியளிப்பதைக் காணலாம்.

ஞாயிறு : ஞாயிற்றை நோக்கிப் பேசுகின்றார் : ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஒட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?

இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா?

உங்களுக்கு மரணமில்லையா ? நீங்கள் அமுதா? உங்களைப் புகழ்கின்றேன். ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.’

இதனைத் திரும்பத் திரும்பப் படிக்கும்போது படிமங்கள் (Images)

11. வசன கவிதை- 1. காட்சி (2). 12. டி-1. காட்சி (இரண்டாங்கினை)-ஞாயிறு-5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/140&oldid=681163" இலிருந்து மீள்விக்கப்பட்டது