பக்கம்:பாரதீயம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் f 25

அலை அலையாக நம் மனத்தில் கிளர்ந்தெழுகின்றன அல்லவா? இப் போதுதான் கவிதைத் தேவி நமக்குத் தரிசனம் தருகின்றாள்.

ஞாயிற்றின் தன்மையைப்பற்றிக் கூறும் பகுதி இது: ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மை யேற ஒளி தோன்றும், வெம்மையைத் தொழுகின்றோம். வெம்மை, ஒளியின் தாய், ஒளியின் முன்னுருவம். வெம்மையே, நீதி.

நீதான் வீரத் தெய்வம்.

நீதான் ஞாயிறு.

தீயின் இயல்பே ஒளி.

தீயே, நீ எமது உயிரின் தோழன். உன்னை வாழ்த்துகின்றோம்

ஞாயிற்றினிடத்தே, தியே, நின்னைத்தான் போற்றுகின்றோம். ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம். நினதொளி நன்று. நின்செயல் நன்று. நீ நன்று.” இதில் ஞாயிற்றைத் தெய்வமாக்கிவிடுகின்றார். ஞாயிறு போற்று தும், ஞாயிறு போற்றுதும்” என்ற இளங்கோவடிகளின் மரபினைப் பின்பற்றுகின்றார். இப்பகுதியைப் படிக்கும்போது நம் உள்ளம் கிளர்ந்தெழுவிதை உணர்கின்றோம். கவிதையும் தட்டுப்படுகின்றது. இன்னும் ஞாயிற்றின் தன்மையை,

செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன. - இவை தமது தந்தைமீது காதல் செலுத்துகின்றன. அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன. அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்லமாட்டா

ஞாயிறு மிகச் சிறந்த தேவன். அவன் கைப்பட்ட

இடமெல்லாம் உயிருண்டாகும். அவனையே மலர் விரும்புகிறது. இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தியிருக்கின்றன. அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும். அவனை வான் கவ்விக்கொள்ளும்.

13. டி-ஞாயிறு- 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/141&oldid=681164" இலிருந்து மீள்விக்கப்பட்டது