பக்கம்:பாரதீயம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாரதீயம்

அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர். அவன் புகழைப் பாடுவோம். அவன் புகழ் இனிது.”*

என்ற பகுதியில் கண்டு மகிழலாம்.

ஒரு பாடலில் ஞாயிற்றைத் துதிப்பதற்குப் புலவர்களையும் அறிவுப் பொருள்களையும் (Sentient beings) உயிர்ப்பொருள் களையும் சேர வாரும் செகத்திரே என்று அழைப்பு விடுக்கின்றார்.

How -o * ++++    ser

அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழை தருகின்றான்.

மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம். ஞாயிறு, வித்தை காட்டுகின்றான். கடல்நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான். அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகிறான். மழை இனிமையுறப் பெய்கிறது.

மழை பாடுகிறது. அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி. வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன.’

இப்பகுதியிலுள்ள இறுதி மூன்று அடிகளில் கவிதையின் கொடுமுடி யினைக் காணலாம். இந்த மூன்று அடிகளையும் பலமுறை சொல்லிப் பாருங்கள்; கவிதையின் அடிநாதம் தட்டுப்படும். இப்பாடலின்,

பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள். வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன,

அனைத்தும் ஒன்றாதலால். வெப்பம் தவம், தண்மை யோகம் வெப்பம் ஆண், தண்மை இனிது. ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?

அது வாழ்க.

என்ற இறுதிப் பகுதி முத்தாய்ப்பாக அமைத்துவிடுகின்றது. போக மும் யோகமும் இணைந்து செல்லும் தத்துவத்தைக் காண் கின்றோம்.

1 4. -ை ஞாயிறு- 10. 15. டிெ-ஞாயிறு-11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/142&oldid=681165" இலிருந்து மீள்விக்கப்பட்டது