பக்கம்:பாரதீயம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் f27

அடுத்து, ஞாயிற்றை இயற்கைக் குறியீடுகளாகவும், தெய்வக் குறியீடுகளாகவும் பேசும்போது கவிதைப் பண்பு கொடுமுடியை எட்டிவிடுகின்றது.

வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே! பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே. வலிமையின் ஊற்றே, ஒளிமழையே, உயிர்க் கடலே, சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை

உலகமென்னும் புனங்காக்கச் சொல்லிவைத்துவிட்டுப்போன விளக்கே: கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன்முகத்தை மூடிவைத் திருக்கும் ஒளியென்னும் திரையே : ஞாயிறே; நின்னைப் பரவுகின்றோம். மழையும் நின்மகள்: மண்ணும் நின்மகள்; காற்றும் கடலும் கலுைம் நின்மக்கள்; வெளி நின் காதலி; இடியும் மின்னனும் நின் வேடிக்கை. நீ தேவர்கட்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.’

அடுத்த பாடலில் மின்னலை ஒளித்தெய்வத்தின் ஒரு லீலையாகஒளித் தெய்வத்தின் தோற்றமாகக்-காண்கின்றார். அதனை மின் சக்தியாகக் காணும் கவிஞரின் அறிவியல் கற்பனையைக் கண்டு வியக் கின்றோம்.

மின்னலைத் தொழுகின்றோம்; அது நம்மை ஒளியுறச் செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின்சக்தி இல்லாத இடம் இல்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙேைம. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சையிலையிலே, செம்மலரிலே, நீலமேகத்திலே, காற்றிலே,வரையிலே-எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் போற்றுகின்றோம்.

16. தோ. பா : ஞாயிறு வணக்கம்-(3) என்பதுடன் இந்த

அடியை ஒப்பிடுக. - 17. ஞாயிறு-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/143&oldid=681166" இலிருந்து மீள்விக்கப்பட்டது