பக்கம்:பாரதீயம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாரதீயம்

என்ற வாழ்க்கையின் மெய்ப்பொருளைத் தெளிவாக்கிவிடுவார். இந்தக் கவிதைகளில் ஆழங்கால் பட வேண்டுமானால் 'வாஸனை' வேண்டும்; பூர்வ புண்ணியமும் வேண்டும். கருத்துகளை அறிதல் வேறு; உணர்தல் வேறு; அவற்றோடு ஒன்றிப்போதல் வேறு.

  காற்று : காற்றைப்பற்றிய கவிதைகள் அற்புதமாக அமைந் துள்ளன. குறியீடுகள் இங்குக் கொஞ்சுகின்றன. ஒரு சாண் கயிற்றை ஆணாகவும் முக்கால் சாண் கயிற்றைப் பெண்ணாகவும் உருவகித் துள்ளார் கவிஞர். கவிஞரை இக்கவிதை ஒரு சித்தர் நிலைக்கு உயர்த்திவிடுகின்றது.
  எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா!
     யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்.’

என்று அவரே தம்மை ஒரு சித்தராகச் சொல்லிக் கொண்டவரல்லவா? மேற்குறிப்பிட்ட இரண்டு கயிறுகட்கும் 'கந்தன்' என்றும் 'வள்ளி' என்றும் திருநாமம் இட்டு வழங்குகின்றார்.

  ஒரு கயிற்றிலிருந்து வாயுதேவன் வெடித்துத் தோன்றுகின்றான். அவன் வயிர ஊசிபோல் ஒல்வியான ஒளி வடிவத்தைக் கொண்டிருக் கின்றான். அவனைக் கவிஞர்,
  'காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரம்மம்’ என்று போற்றி வணங்குகின்றார். அவன் தோன்றிய பொழுதில் வான் முழுதும் பிராணசக்தி நிரம்பக் கனல் வீசிக்கொண்டிருந்தது. காற்றுத்தேவன் பேசுகின்றான் (கவிஞரை நோக்கி) :
  மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு (வள்ளி) 
  உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை, அது செத்துப் 
  போய்விட்டது. நான் பிராணசக்தி. (அண்மை, வீட்டிற்கு நீர் பருகச் 
  சென்றிருந்த வைதிகம்-கவிஞர்- "அம்மா நல்ல நித்திரை 
  போலிருக்கிறதே?" என்று விடுத்த வினாவுக்கு இது பதில்)
       காற்றுத்தேவன் தொடர்கின்றான். "என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் பிராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்தது: சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க-இறக்க-விட்டுவிட்டேன். துயிலும் 

18. சுய சரிதை : 2. பாரதி அறுபத்தாறு-1. 19. 'நமஸ்தேவாயோ, த்வமேய பிரத்யட்சம் பிரஹமாஸி

   -என்பது வேத வாக்கிய்ம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/146&oldid=1396092" இலிருந்து மீள்விக்கப்பட்டது