பக்கம்:பாரதீயம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் 13 f

சாவுதான், சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அன் விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்திகுமாரன், என்னை வணங்கி வாழ்க.

காற்றைப்பற்றிய வசன கவிதை ஓர் அற்புதமான வசன காவியம். சூறாவளியும் வாயு தேவனே. நடுக்கடலிலுள்ள கப்பல் கிர்த்துரளிப்பட்டு அழிகிறது. கப்பலிலிருந்து அழியும் உயிர்கள் ஊழிக் கூத்து எப்படியிருக்கும் என்பதை அறிந்தவண்ணம்’ மறை கின்றன. காற்றைப்பற்றிய கவிதை(2)யின் இறுதிப் பகுதி :

ஊழி முடிவும் இப்படியேதானிருக்கும் உலகம் ஒடு நீராகிவிடும்; தி நீர், சக்தி காற்றாகிவிடுவாள்.

சிவன் வெறியிலே யிருப்பான் இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அஃது சக்தி யென்பது தோன்றும் காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித் துளை நீராக்கிச் சண்டமாருதம் செய்கின்றான். காற்றே யுகமுடிவு செய்கின்றான்.

காற்றே காக்கின்றான்.

அவன் நம்மைக் காத்திடுக. - காற்றே போற்றி. நீயே கண்கண்ட பிரம்மம்.

அடுத்து வரும் கவிதைகளில் காற்றின் நிலை பற்றிய விளக்கம், (3) பாலைவுளத்தின் கொடுமை பற்றிய விளக்கம் (4), உயிர் தான் காற்று எனல் (5) காற்றைப் போற்றுதல் (6), சிற் றெறும்பின் இயக்கம் (7), காற்றுத் தேவனுக்கு வரவேற்பு (8), காற்றோடு தோழமை கொள்ளல் (9), குளிர்ந்த காற்று நலமென உணர்த்துதல் (10), சக்தியின் பல வடிவங்களில் காற்றும் ஒன்று எனக் காட்டுதல் (11), வாயு பெளதிகத்துள் என்றும், அதனை ஊர்ந்து வரும் சக்தியே காற்றுத் தேவன் என்றும் காட்டுதல்(12), ’’

20. துஞ்சினார் செத்தாரின் வேறல்ல--குறள் 926. 21. தோ. பா : 35. ஊழிக் கூத்து என்ற பாடலை இசை

யுடன் படித்து இந்த அநுபவத்தைப் பெறுக. 22. என்ன கூறுகின்றார் என்பது கவிஞருக்கே வெளிச்சம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/147&oldid=681170" இலிருந்து மீள்விக்கப்பட்டது