பக்கம்:பாரதீயம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 32 பாரதீயம்

வையகம் உயிருடையது என்றும், அந்த வையகத்தின் உயிரையே காற்று எனக் கூறுதல் (18) என்பனபோன்ற தத்துவ உண்மைகள் கவிஞனின் குரலாக வெளிப்படுகின்றன. கவிதை 14உம், 15உம் தத்துவத்தின் கொடுமுடிகளைக் காட்டுகின்றன.

காற்றைப் புகழ நம்மால் முடியாது அவன் புகழ் தீராது.

பிரான வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. (14)

இக்கவிதையில் அபாநன், வியாநன், உதாநன், ஸ்மாநன் என்ற காற்றின் வடிவங்களைத் தொழுகின்றார். காற்றின் செயல்களைப் பரவி உயிர் வாழ்க என்று கவிதை நிறைவு பெறுகின்றது.

15-ஆம் கவிதை காற்றின் பெருமை பகரப்படுகின்றது. காற்றை உயிராக உருவகித்து அதனுடன் பேசுகின்றார்.

உயிரே, நின்பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்.

மஹத்- அதனிலும் பெரிய மஹத்

அதனிலும் பெரிது- அதனிலும் பெரிதுஅணு- அதனிலும் சிறிய அணு

அதனிலும் சிறிது- அதனிலும் சிறியதுஇருவழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம்.

இக்கவிதையிலுள்ள தத்துவத்தை அறிதல் அரிது; உணர்தலும் அரிது, முயன்று பார்ப்போம், ஆழங்கால் பட்டால் முடியாதது ஒன்றுமில்லை.

கடல் : இதுபற்றி இரண்டே கவிதைகள். இரண்டும் அறி வியல் உண்மைகளை அற்புதமாகக் காட்டுவன. -

கடலே காற்றைப் பரப்புகின்றது;

விரைத்து சுழலும் பூமிப்பந்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/148&oldid=681171" இலிருந்து மீள்விக்கப்பட்டது