பக்கம்:பாரதீயம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் #33

பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல். நீர், அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?

பராசக்தியின் ஆணை.

அவள் நமது தலைமீது கடல் கவிழ்ந்து விடாதபடி ஆதரிக்கின்றாள்.

அவள் திருநாமம் வாழ்க. கடல் பெரிய ஏரி, விசாலமான குளம்; பெருங்கிணறு. கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா? அதுபற்றியே கடலும் கவிழவில்லை. ப்ராசக்தியின் ஆணை.

மேற்குறிப்பிட்ட கவிதைப் பகுதியில் கவிஞர் குறிப்பிடும் செயல் கள் நிலைப்படுவதற்குப் புவியீர்ப்பு விசையே காரணம் என்பதை நாம் அறிவோம்; சர் ஐசாக் கியூட்டன் கண்டறிந்த உண்மை என்பதும் நமக்குத் தெரியும். ஒன்றை நாம் இவ்விடத்தில் சிந்திக்க வேண்டும். இச்செயல்கள் யாவும் இறைவன் படைத்த ஏதோ ஆற்றலால் நடை பெறுகின்றன. இவை நடைபெறும் காரணத்தைக் கண்டு அதற்குப் புவியீர்ப்பு விசை என்று பெயர் சூட்டினார் நியூட்டன். ஆனால், காரியங்கள் நடைபெறும் ஆற்றலை நியூட்டன் படைக்கவில்லை : இறைவனே படைத்தான் என்பதை நரம் அறிதல் வேண்டும். இத னால்தான் கவிஞர்,

உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது. இஃதெல்லாம் அவளுடைய திருவருள். அவள் திருவருள்ை வாழ்த்துகின்றோம்.

என்று கவிதையை நிறைவு செய்கின்றார். அடுத்த கவிதையில் கடற் காற்று மழையைப் பெய்விக்கின்றது என்று கூறி மழைக்குக் காரண மாக இருக்கும் கடற்கடவுளாம் வருணனையும், தேவர் தலைவனான இந்திரனையும் வாழ்த்துகின்றாா. இந்திரன்தானே மேகநாதன்!

வசன கவிதைப் பகுதியில் ஐந்தாவதாகவுள்ள ஜகத் சித்திரமும் ஆறாவதாகவுள்ள விடுதலையும் சிறு நாடகங்கள். முதல் நாடகம் கடவுள் ஒளிப் பொருள். அறிவு கடவுள்; அதன் நிலை மோட்சம் என்ற தத்துவத்தையும்; இரண்டாம் நாடகம்,

மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/149&oldid=681172" இலிருந்து மீள்விக்கப்பட்டது