பக்கம்:பாரதீயம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் 135

நோபெல் பரிசைப் பெற்றன. இந்தப் பரிசுக்குப் போட்டியிடவேண் டும் என்று விரும்பிய பாரதிக்கு வால்ட் விட்மெனின் ஜனநாயகத் குரலும் தாகூரின் கீதாஞ்சவிப் புகழும் உந்து சக்தியாக அமைந்து காட்சிகள் (என்ற வசன கவிதைகளை) எழுதத்துண்டியிருக்கலாம்.’ இன்னும் சிலர் வடமொழி வேதங்கள், உபநிடதங்களைப் படித்து அநுபவித்ததனால் அவற்றின் தாக்கம் காட்சிகள் எழுதக் கை கொடுத்து உதவியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

பாரதியின் வசன கவிதைகள் யோகநிலையில் கண்ட பேரின்பக் கனவுகள். இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு கவிதையும் இவ்வுண்மையைப் பறைசாற்றுகின்றது. வேதகாலத்து ரிஷிகளைப் போலவே அழகு பொருந்திய அருட்சொற்களில் காட்சிகள் வருணிக்கப் பெறு கின்றன.

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்!

பயனின்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!”

என்று கூறியவரல்லவா? பாடல்கள் வசனத்திலிருந்தாலும் திருமூலர் சொற்களின் வேகத்தைப் பெறுகின்றன; பொருள்களத்தையும் தாங்கிச் செல்லுகின்றன. இதனால் பாரதியார் சித்தர்கள் நிலைக்கு உயருகின்றார். ‘யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் ‘ என்று தன்னம்பிக்கையுடனும் சொல்லிக் கொள்ளுகின்றார். பாரதி யார் முதன்முதலில் வசன கவிதைகளை எழுதினவராதலால் வசன கவிதையின் தந்தையாகின்றார்: வசன கவிதை புதுக் கவிதை பிறக்கக் காரணமாக இருந்ததால் வசன கவிதை என்ற பாரதியின் மகள் {சேய்) புதுக்கவிதையின் தாயாகின்றாள். ஆகவே பாரதியார் புதுக் கவிதையின் பாட்டன் (பீதாமகன்) ஆகின்றார்.

5ITEFAET: புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை - பக் 44-45. 26. தோ. பா: பேதை நெஞ்சே-5, 27. சுயசரிதை-பாரதி அறுபத்தாறு-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/151&oldid=681175" இலிருந்து மீள்விக்கப்பட்டது