பக்கம்:பாரதீயம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் 3g

முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன். உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட - சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.”

இங்கு மனம் வேறு, ஆன்மா வேறு என்பதை உணர்ந்தால்தான் இப் பாடலின் உட்கருத்து தெளிவாகும்.

‘தன்னை வென்றாலவை யாவும் பெறுவது

சத்திய மாகு மென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்

முற்றும் உணர்ந்தால்தான்”

தன்னை (மனத்தை) வென்றாளும் திறமையை அடையலாம் என்பது கவிஞர் உணர்த்தும் உண்மை.

அன்பினால் அனைத்தையும் வெல்லலாம் என்பது கவிஞர் காட்டும் உண்மை.

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி!- கிளியே!- அன்புக் கழிவில்லை காண். 9

என்ற பாடலில் கூறுவதைக் காண்க. இன்னொரு பாடலில்

- வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’.

என்று தவத்தினால் விரும்பியவற்றையெல்லாம் எய்தலாம் என்று கூறிய கவிஞர் அன்பே தவமனைத்திலும் சிறந்ததென்று காட்டி அன் புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்பதைக் கோடிட்டுக் காட்டுவர். பாரதி நெஞ்சுக்கு உரைத்தவை யாவும் நமக்கு உரைத் தனவாகவே கொள்ளல் வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை : ஒருவன் தன் வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியவையாக நாணம், கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை என்ற ஆறனைக் கூறுவார் கவிஞர். இந்த ஆறனையும் ஒருவன் தவிர்த்துவிட்டால் அவன் மரணமிலாப் பெருவாழ்வை எய்துவான் என்கின்றார். மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை

7. டிெ : மனப்பெண். அடி (31-38).

8. டிெ : ஆத்மஜெயம்-2. 9. தோ. பா : கிளிப்பாட்டு-2. 10. ஷ்ெ : வி. நா. மா-37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/155&oldid=681179" இலிருந்து மீள்விக்கப்பட்டது