பக்கம்:பாரதீயம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் f4?

அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

இவர்தம் அச்சத்தை எடுத்துக் காட்டி இதற்குரிய காரணங்களைப் பட்டியலிட்டும் காட்டுவார். கணபதியின் தாளைக் கருத்திடை வைத் தால் அச்சம் தீரும் என்கின்றார். பிறிதொரு பாடலில் அச்சம் வேண்டேன் என்கின்றார். புலை,அச்சம் போய் ஒழிதல் வேண்டும்’ என்று காளியை வேண்டுகின்றார். இன்னொரு பாடலில்,

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,

காளிநீ காத்தருள் செய்யே:

மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்

மாரவெம் பேயினை அஞ்சேன்’

என்று கரணமும் தனுவும் காளிக்கு ஈந்து மரணம், நோய்கள், மாரவெம் பேய்க்குத் தனது அஞ்சாமையைத் தெரிவிக்கின்றார். கிளிப்பாட்டில்:

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி-கிளியே-அன்புக் கழிவில்லை கரண்

என்று பயம் அன்பினால் அழிந்துபடும் என்று அச்சத்தைப் போக்கும் வழியையும் காட்டுவர். அச்சமில்லை ?? என்ற பாடலில்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கூறுபவர் உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் தமக்கு அச்சமில்லை என்று பறைசாற்றுகின்றார். இந்தப் பாடலைப் படிக் கும்போதே.

நாமார்க்குங் குடியல்லோம்

நமனை அஞ்சோம்.’


என்ற நாவுக்கரசரின் வாக்கையும் நினைவுகூரச் செய்துவிடுகின்றார். இன்னொரு பாடலில்,

15. தோ. பா. வி. நா. மா. 4. 16. - , 30 , 17. தோ. பா. யோக சித்தி- 10. 18. டிெ. மகாசக்தி பஞ்சகம்-1. 19. டிெ. கிளிப்பாட்டு-2. 20. வே. பா. 1. அச்சமில்லை. ! 21. தேவாரம் 4. 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/157&oldid=681181" இலிருந்து மீள்விக்கப்பட்டது