பக்கம்:பாரதீயம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo பாரதீயம்

பயமெனும் பேய்தனை அடித்தோம்- பொய்ம்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’

என்று ஜயபேரிகை கொட்டி முழக்குகின்றார். மாயையைப் பழித் தல்’ என்ற பாடலில்,

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு

மாயையே!- இந்தத்

தேகம் பொய்யென் றுணர்தீ ரரைஎன்

செய்வாய்?

என்று தம் அஞ்சாமையைத் தெரிவிக்கின்றார். இதே பாடலில் நாவுக்கரசரை நினைவுறுத்தும் பாங்கில்,

யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ந்தனன் மாயையே!- உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை

என்று வீர முழக்கம் செய்கின்றார்.

சித்தி னியல்பும் அதன்பெருஞ் சக்தியின்

செய்கையும் தேர்ந்து விட்டால்-மனமே! எத்தனை கோடி இடர்வந்து சூழினும்

எண்ணஞ் சிறிது முண்டோ?* என்று தெளிவு பெற்றவரல்லவர்? சிறுவர்க்கு நீதி உரைக்கும் பாங் கில், எடுத்த எடுப்பில் அச்சந்தவிர் என்று புதிய ஆத்தி: சூடியைத் தொடங்குகின்றார். இதில்,

பேய்களுக்கு அஞ்சேல் ரெளத்திரம் பழகு.??

என்ற அறவுரைகளும் அச்சத்தைத் தவிர்க்கச் செய்யும் அறவுரை களாகும். பாப்பாவை நோக்கி,

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

22. வே. பா. ஜயபேரிகை-1. 23. டிெ. மாயையைப் பழித்தல். 24. டிெ : தெளிவு-3. 25. ப. பா. : புதிய ஆத்தி சூடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/158&oldid=681182" இலிருந்து மீள்விக்கப்பட்டது