பக்கம்:பாரதீயம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் 143

மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! என்று மழலை மொழியில் வழங்கும் நீதியிலும் அச்சம் கொள்ள லாகாது என்பதை உணர்த்துகின்றார்.

பயம் கொள்வதால் பயனில்லை என்பதை,

மேன்மைப் படுவாய் மனமே கேள்

விண்ணின் இடிமுன் விழுந்தாலும்

பான்மை தவறி நடுங்காதே,

பயத்தால் ஏதும் பயனில்லை;

யான்முன் உரைத்தேன் கோடிமுறை

இன்னும் கோடி முறைசொல்வேன்’

என்று கூறுவர். கணபதியின் அருள் இருப்பதால் பயம் ஒழிந்தது என்றும் கூறுவர். இதற்கு அடுத்த பாடலிலும் அச்சத்தைத் தவிர்க் கும் உறுதியுடன் உள்ளதைக் காட்டுவார். தாம் எல்லா நலன்களும் பேற்றுக் களித்துரை செய்யக் கணபதி பெயரும் இருப்பதால்,

அச்ச மில்லை அமுங்குத லில்லை, நடுங்குத லில்லை நாணுத லில்லை, பாவ மில்லை பதுங்குத லில்லை; ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்: அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம் கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்: யார்க்கு மஞ்சோம், எதற்கு மஞ்சோம்; எங்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்??

என்கின்றார். மனத்திலுறுதி வேண்டும்....காரியத்திலுறுதி வேண் டும் என்று தம் திடசித்தத்தைக் கூறியவரல்லவா?

கவலை : கவலை மனிதனின் மனத்தையும் உடலையும் அரித்துத் தின்னும் ஒருவகைப் புற்று நோய். அதனைத்தலையெடுக்க வொண்ணாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதைப் பல பாடல் களில் தெரிவிப்பார். ஒரு பாடலில்,

மூட நெஞ்சே! முப்பது கோடி முறையுனக் குரைத்தேன்; இன்னும் மொழிவேன்;


26. தோ. பா: வி. நா. மா. 23.

27. டிெ-டிெ. 24. - 28. வே. பா. உறுதி வேண்டும்- 1.2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/159&oldid=681183" இலிருந்து மீள்விக்கப்பட்டது