பக்கம்:பாரதீயம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 44 பாரதீயம்

தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே; ஏது நிகழினும் நமக்கென்? என்றிரு: பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்: நமக்கேன் பொறுப்பு? நான்என்றோர் தனிப்பொருள் இல்லை; நான்எனும் எண்ணமே வெறும்பொய்: என்றான் புத்தன்; இறைஞ்சுவோம்! அவன்பதம்.’

என்ற பகுதியில் எதற்கும் சஞ்சலப்படுதலாகாது என்று உரைத்திடு வர். இதனைத் தொடர்ந்து,

இனியெப் பொழுதும் உரைத்திடேன், இதை நீ மறவா திருப்பாய், மடமை நெஞ்சே! கவலைப் படுதல்ே கருநர கம்மா! கவலையற் றிருத்தலே முக்தி; சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

என்று கவலையைத் தவிர்க்குமாறு நெஞ்சை வற்புறுத்துவர்.

தெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை 9

என்கின்றார். பெரும்பாலும் கவலையை மனிதனே விளைவித்துக் கொள்கின்றான். ஆசையை வளர்ப்பதால் சாணத்தில் புழுக்கள் உண்டாதல்போல் மனத்தில் கவலைகள் தோன்றுகின்றன. இச் கவலைகளைப் போக்க வேண்டுமானால்,

-தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மகாசக்தி! நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு.

என்று கூறுவார். இன்னும் சிலர் கடந்தவற்றை-வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்தவற்றையும், தாமே விளைவித்துக்கொண்டது துன்பங்களையும்-நினைந்து கவலைப்படுவர். இவர்களை நினைந்து பேசுகின்றார் :

சென்றதினி மீளாது மூட ரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

29. தோ. பா. வி. நா. மா. 36. 39. டிெ : மகாசக்தி வெண்பாட2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/160&oldid=681185" இலிருந்து மீள்விக்கப்பட்டது