பக்கம்:பாரதீயம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் #47

கவறாடலின் கொடுமை : கவிஞர் தருமனைக்கொண்டு இதனைப் பேசச் செய்கின்றார். ஆயினும், அவனே சூதாட்டத்தில் இறங்கிப் பலியாவதையும் காட்டுகின்றார். அறத்தோன்றலையே கவறாடலுக்குத் திருப்புவதில் சகுனியைச் சிறந்த சமர்த்தனாக்கு கின்றார். மன்னர் சூதாட வல்லுக்கழைத்தபோது மறுப்பதில்லை. வாட்போரிலும் சாத்திரப் போரிலும் வல்லவன் வெல்வான்; வன்மை: இல்லாதவன் தோற்றிடுவான். இது சதியன்று. நல்லவன். அல்லா தான் என்ற மரபு இங்கில்லை. வல்லமர் செய்ய மன்னர் அவைமுன் நின்னை அழைத்துவிட்டேன். வருவதுண்டேல் சொல்லுக: துணி வின்றேல் அதனையும் கூறுக’ என்கின்றான் சகுனி. சிலம்பில் விதி வெல்வதைக் காண்பதைப் போல், இங்கும் விதி வெல்வதைக் காண்கின்றோம். தருமன் சூதிற்கிணங்குகின்றான்.

மெய்யறிந் தவர் தம்மு ளுயர்ந்தோர்.

விதியினாலத் தருமனும் வீழ்ந்தான். *

என்கின்றார் கவிஞர். கவறாடலின் கொடுமையைத் தருமன் எங் கனம் அநுபவித்தான்? அனைத்தையும் இழந்த பிறகு தம்பியரையும் தன் மனைவியரையும் இழந்து உலகப் பழிக்கு ஆளாகின்றான்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்.”

என்ற வள்ளுவத்திற்குச் சரியான இலக்கியமாகின்றான். இதனால் அரசவையில் பெருத்த அவமானம், பன்னிரண்டு ஆண்டுகள் காடுறை வாழ்க்கை, ஒராண்டு கரந்துறை வாழ்க்கை இவனுக்குக் கிடைத்த பரிசுகள்:

குழந்தைகட்கு நீதிகள் : பிஞ்சு மனங்கட்கும் வாழ்க்கை வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகளைக் காட்டுகின்றார்.49

ஓடி விளையாடு பாப்பாடநீ

ஒய்ந்திருக்க லாகாது பாப்பா!

கூடி விளையாடு பாப்பாடஒரு

குழந்தையை வையாதே பாப்பா!

இதில் சின்னஞ் சிறுவயதிலேயும் சுறுசுறுப்பு வேண்டும் என்கின்றார்.

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு

கனிவு கொடுக்கும், நல்ல பாட்டு: 38. டிெ பா. ச. 2.36 : 181.

39. குறள். 934. 40. ப. பா. பாப்பாப் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/163&oldid=681188" இலிருந்து மீள்விக்கப்பட்டது