பக்கம்:பாரதீயம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் 149

அக்கிரமங்கள், சட்டத்தை மீறும் போக்கு, சட்டத்தையே தமக்இ நன்மை விளைக்குமாறு செய்யும் சாணக்கியம், ஈடும் எடுப்பும் அற்ற முறையில் கையூட்டுப் பேய் தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு வாளா இருத்தல், தலைமைப் பீடங்களிலிருப்போரே கையூட்டின் மூலமாக இருத்தல் முதலியவை இன்று அன்றாட வாழ்வில் நாம் காணும் காட்சிகள். இன்று பாரதியார் வாழ்ந்து இவையெல்லாம் சுதந்தர இந்தியாவில் நடைபெறுவதைக் கண்டால் என்ன செய் வாரோ? அவருடைய மனம் கொதித்து என்னென்ன பாடல்களைப் படைக்குமோ? இவையெல்லாம் படித்தவர்களால் நடைபெதில் தால்,

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்:

என்று மனம் வருந்திக் குடுகுடுப்பாண்டி வாயில் வைத்துப் பேக கின்றார் கவிஞர்.

ஊழின் பெருவலி : பால்வரைத் தெய்வம் எனக் கூறப்படும் ஊழின் பங்கு பாஞ்சாலி சபதம் முழுவதுமே ஊடுருவி நிற்பதைக் காண்கின்றோம். இடத்திற்கேற்றவாறும் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறும் இதை மாந்தர்களின் வாயிலாக ஊழின் வலி எடுத்தோதப் படுகின்றது.

(1) பாண்டவர்களைச் சூதிற்கழைக்குமாறு தந்தையை வற்புறுத்துகின்றான் துரியோதனன். அப்படிச் செய்யாவிடில் தன் தலையைக் கொய்து உயிர் விடுவதாக அச்சுறுத்துகின்றான். திருதி ராட்டிரனின் மனம் தளர்வுறுகின்றது. விதியை நினைக்கின்றான்: பாண்டவர்க்கு அழைப்பு விடுக்கவும் ஒருப்படுகின்றான். விதுரன் போச்சுது! போச்சுது பாரத நாடு என்று ஏங்கிக் கூறும்போது,

சென்று வருகுதி, தம்பி, இனிமேல் - சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்! வென்று படுத்தனன் வெவ்விதி என்னை

மேலை விள்ைவுகள் நீஅறி யாய்ோ? அன்று விதித்ததை இன்றுத டுத்தல்

யார்க்கெளி தென்று.* விதியின்மீது பாரம்போட்டு மெய் சோர்ந்து விழுகின்றான்.

(2) தருமன் அத்தினபுரம் செல்ல ஒருப்படுகின்றான்: வீமனும் வில் விசயனும் தமைய்ன் பேச்சைத் தட்டிப் பணிவேர்டு

41. புெதிய கோணங்கி-2. 42. பா. ச-1.45 : 1.13,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/165&oldid=681190" இலிருந்து மீள்விக்கப்பட்டது