பக்கம்:பாரதீயம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவிதைகளில் காணும் சுவைகள்

இறையதுபவத்திற்கு அடுத்த நிலையில் வைத்தெண்ணக் கூடியது இலக்கியச் சுவையாகும். இலக்கியச்சுவையில் ஈடுபட்டு மனத்தை அதில் பறிகொடுத்த புலவர் ஒருவர்,

இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’

என்று தம் அநுபவத்தை வெளியிடுகின்றார். தம் வாழ்நாள் முழு வதும் தமிழ் இலக்கியத் தேனை மாந்திய பாவேந்தர்,

கன்னற் பொருள்தரும் தமிழே நீஓர்

பூக்காடு; நானோர் தும்பி’

என்று தம் அநுபவத்தை வெளிப்படுத்துகின்றார். இவர்கள் இரு வரும் தமிழ் இலக்கியச் சுவையில் ஈடுபட்ட புலவர்கள். தமிழ்ச் சுவையை மாந்திய பாரதியாரும்,

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே ;-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா!’

என்று தமிழ்ச்சொல்லின் உயர்வைக் கூறி அதைப் படித்திடுமாறு பாப்பாவுக்கு ஆர்வம் ஊட்டுகின்றார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்கின்றார்.

சுவைபற்றிய அடிப்படைக் கருத்தை அறிந்துகொள்வதற்காக சில நிகழ்ச்சிகளை உடன் வைத்து எண்ணுவோம்.

(1) வண்ணப் படத்தில் வரையப்பெற்ற பன்றி ஒன்று

சேற்றில் மூழ்கி வெளியேறிய தோற்றத்தை அப்படியே ஓவியர் காட்டுவதாக வைத்துக்கொள்வோம். அதைப் பார்க்கும் நாம் அதனையே பன்முறை உற்று நோக்கி ஒருவித இன்பத்தை அடைகின் றோம் அல்லவா? ஆயினும், பன்றி ஒன்று சேற்றில் புரண்டு எழுந்து சேறும் அழுக்குமாக நம் எதிரில் தோன்றினால் நாம் அக்காட்சியைக் கண்டு இன்பம் அடைகின்றோமா? இல்லையன்றோ? சில சமயம் அக்காட்சியைக் காணச் சகியாமல் அருவருப்புடன் முகத்தைக்கூட

1. தமிழ்விடு தூது-கண்ணி-151.

2. அழகின் சிரிப்பு- தமிழ்-பாட்டு 10.

3. பர. பா. பாப்பாப் பாட்டு-12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/168&oldid=681193" இலிருந்து மீள்விக்கப்பட்டது