பக்கம்:பாரதீயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாரதீயம்

கொள்கை அல்லது கொள்கைகளைத் தமக்கே உரிய முறையில், பிறர்கூறாத வகையில் ஒருவர் கூறுவது அவர்தம் தனிச் சிறப்பாகும். மொழி, இலக்கியம்பற்றிய கொள்கைகளைத் தொகுத்தும் வகுத்தும் கூறினார் தொல்காப்பியர். அவர் கூறிய நூல் தொல்காப்பியம்’ எனப் பெயர் பெற்றது. அந்நூலுக்குத் தமக்கே உரிய முறையில் உரை கண்டார் கச்சினார்ச்சினியர்; அது கச்சினார்ச்சினியம் என்ற திருநாமம் பெற்றது. இங்ஙனமே, சேனாவரையரின் அந்நூலுக்குரிய உரை சேனாவரையம் என்ற பெயரால் வழங்குகின்றது. இத்தகைய மரபினைப் பின்பற்றிச் சில கொள்கைகளைப் பாரதியார் தமக்கே உரிய முறையில் கூறுவதைப் பாரதீயம் என்று வழங்கலாமல்லவா ?

எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டில் வழங்கும் மொழி அல்லது மொழிகளில் தோன்றும் இலக்கியங்களில் அவை தோன்றும் காலத் தில் நிலவும் சமுதாய வாழ்வு பிரதிபலிக்கும் என்பது அறிஞர்கள் கண்ட உண்மை. இலக்கியத்தைப் படைக்கும் ஆசிரியன் தான் வாழும் சமுதாயத்தில் நடைமுறையிலுள்ள கருத்துகளை இலக்கியத் தில் காட்டுவான். அவன், நிலவும் கருத்துகளை ஒன்றுசேர்த்து விளக்கம் செய்வானே யன்றிப் புதிய கருத்துகளைக் கண்டறிவது அவன் கோக்கம் அன்று. புதிய கருத்துகளைக் கண்டறிவதும் அவற்றை வெளிப்படுத்துவதும் மெய் விளக்க நூலறிஞனின் வேலை யாகும். இலக்கிய ஆசிரியன் அக்கருத்துகளைக் கலைத்திறனுடன் காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு ஒன்றனை உண்டாக்கிக்கொள்ளுவான். தான் காட்ட நினைக்கும் கருத்துகளைக் கவர்ச்சிகரமானவையாப் ஒர் ஒழுங்கில் கோவையாக அமைத்துக்கொள்ளுவான். அவற்றைத் தான் ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பில் மிகத்திறனுடன் கவர்ச்சிகர மாக அமையும்படி செய்வான். இங்ஙனம் தோன்றும் இலக்கியமும் தக்க சூழ்நிலை இருந்தால்தான் சூடு பிடிக்கும். காட்டில் வேக மாகவும் பரவும். எனவேதான், எல்லாக் காலங்களிலும் சிறந்த இலக்கியங்கள் தோன்றுவதில்லை ; பேராற்றல் வாய்ந்த ஒருசில

1. Literature is (thus) fundamentally an expression of life through the medium of language.—W. H. Hudson.

2. For a creation of master - work of literature two powers ** incur, the power of the man and the power of the moment, and the man is not enough of the moment.—Mathew Arnold.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/17&oldid=681195" இலிருந்து மீள்விக்கப்பட்டது