பக்கம்:பாரதீயம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் #55

என்றும், ஏனையோர்க்கு அஃது ஆராய்ந்து அறியத்தக்கது என்றும் தொல்காப்பியரும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணினும் செவியினும் திண்னிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’ என்ற நூற்பாவினால் இஃது அறியப்பெறும்.

சுவையற்றிய விளக்கம் : சுவை என்பது என்ன? அது காணப் படும் பொருளால் காண் போரகத்தின் வருவதோர் விகாரம் என்பர் இளம்பூரணர். இருவகை நிலத்தின் இயல்வது சுவையே என்ற செயிற்றிய நூற்பாவினை எடுத்துக்காட்டி, உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் என்ற வேறொரு செயிற்றிய நூற்பாவால் விளக்குவர். ஈண்டு உய்ப்போன் என்பது நடிகனை. நடிகன் செய்யும் அபிநயம் முதலியவற்றால் அச்சுவை காண்போரிடம் உண்டாதல் கூடும். இதனை வேறொரு வகையில் மேலும் விளக்கலாம். இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன அறுசுவைகள் என்பதை நாம் அறிவோம். இவை நாவாகிய பொறி வழிய்ே ஒரு வரது உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளாகும். இவ்வுணர்ச்சி களைத் தரும் பொருள்கள் முறையே கரும்பு, வேம்பு, புளி, உப்பு. கடுக்காய், மிளகு போன்றவைகளாகும் என்பதை அறிவோம்.இவை சுவைப் பொருள்கள் என்று வழங்கப்பெறும். கரும்பினை நாவா கிய ப்ொறியால் சுவை உணருமிடத்து இனிப்புச் சுவையுணர்ச்சி தோன்றுகின்றது. அங்ஙனம் தோன்றுங்கால் அது காரணமாக விருப்புத் தோன்றுகின்றது. இங்ஙனமே வேம்பினைச் சுவைத்து உணருங்கால் கைப்பு உணர்ச்சி தோன்றுகின்றது என்பது தமக்குத் தெரியும். அது தோன்றுங்கால் வெறுப்புத் தோன்றுகின்றது என் பதையும் நாம் உணர்கின்றோம். இங்ஙன்ம் உள்ளத்தே தோன்றும் விருப்பு வெறுப்புகளே உள்ளக்குறிப்புகள் என்று வழங்கப்பெறு கின்றன. இத்தகைய உள்ளக் குறிப்புகளைக்கொண்டு இச்சுவை யுணர்ச்சிகள் வெளிப்படுங்கால் முகமலர்ச்சி, முகச்களிப்பு முதலிய மெய்க்குறிகளைக்கொண்டு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்றன : இம்மெய்க்குறிகளையே விறல்’ அல்லது சத்துவம் என்று வழங்கு

4. தொல். பொருள். மெய்ப். நூற். 27.

5. விறல், பத்து வகைப்படும். அவை மெய்ம்மயிர் சிலிர்த்தல் கண்ணிர் வார்தல், நடுக்கமெய்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரல் சிதைவு என்பனவாகும். அவ்விறல், சுவைகளிலே மனக்குறிப்பு உளதாயவழி உடம்பிலே தோற்றும் உடம்பினும் முகத்து மிகத் தோற்றும் ; முகத்தின் மிகத் தோற்றும் கண்களில், கண்ணின் மிகத் தோற்றும் தண்ணின் கடிை யகத்து. இவை எட்டென்பது வடநூலார் மதம் (சிலப் பக். 34 உ.வே.சா. அய்யர் பதிப்பு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/171&oldid=681197" இலிருந்து மீள்விக்கப்பட்டது