பக்கம்:பாரதீயம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாரதீயம்

வர் இலக்கண நூலார். எனவே, சுவையின் இயல்பினை அறியு மிடத்து காரணகாரிய முறையாகச்சுவைக்கு நிலைக்களனாயபொருள்; சுவை, குறிப்பு, விறல் என்ற நான்கு வகைப் பொருள்களை அறிகின் றோம். நாம் ஒரு காவியத்தைப் படிக்குங்கால் நம்மிடையே உண். டாகும் இன்ப உணர்ச்சியே சுவையாகும். மனம் உணர்ச்சியால் பூரித்திருக்கும்பொழுது அதில் ஒர் ஒளி வீசும். அதுவே இன்பம்; அதுவே ஆன்ம ஒளி. ஆன்மா அங்குத்தான் பிரதிபலிக்கின்றது. அந்நிலையினை அடைவதற்கு மனம் சலனமற்றிருத்தல் வேண்டும். அந்த அசைவற்ற நிலை மனத்திற்குப் பலவிதங்களில் உண்டாகலாம். யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி நிலை நிறுத்திச் சமாதி நிலை வில் ஆன்ம ஒளியைப் பெறுகின்றனர். உறக்கத்திலும் மனம் சோர்ந்து அசைவற்றுக் கிடக்கும்பொழுது அங்கும் ஆன்மா தோற்ற மளிக்கின்றது : இன்பமும் தலைகாட்டுகின்றது. காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கும்பொழுது ஆன்ம ஒளி வீசும்; மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.

சுவைப் பாகுபாடு : சுவையின் பாகுபாட்டையும் காண் போம். நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் நின்றுவிடு கின்றன. ஆகவே, சுவையைப் (ரஸத்தைப்) பாகுபாடு செய்வது இயலர்த்தாகின்றது. சுவை நிறைந்த மாம்பழத்தைத் தின்ற ஒருவன் அதன் சுவையைப்பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆனால் அதன் சுவையை அவன் பிறரால் உண்ரும்படி செய்தல் இயலாது. பிறரும் அம்மாம்பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி அதன் சுவையை உணர முடியாது. சுவை ஒருவருடைய அநுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக் கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் சுவை நிலையை வைத்துக்கொண்டு அதனை வகுத்துக் காட்ட முற்படாமல், சுவைக்கு முன்னிலையாகின்ற உணர்ச்சிகளை வைத்துச் சுவைசளைப் பாகுபாடு செய்தனர். நம் மனத்தில் தோன்றக்கூடிய எண்ணற்ற உணர்ச்சிகளை ஒன்பதாகப் பிரித்துள்ள னர் அவர்கள் : அனைத்தும் இந்த ஒன்பதிற்குள்ளேயே அடங்கும் என்பது அவர்கள் கருத்தாகும். இந்த ஒன்பதிற்குப் புறம்பான மன 6. இங்ஙனம் இலக்கண நூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிப்பு, விறல் என்பவற்றையே உள வியலார் முறையே பொருள் (Object), புலன்காட்சி (Perception), பொது உணர்வு (அநுபவம்), உடல்நிலை மாறுபாடுகள் (Organic states) என்று கூறுவர். 7. இசையினை ஏழே சுரத்தின் சேர்க்கையாக உணர்த்த வில்லையா? ஆயிரக்கணக்கான சுவை உணவு வகைகள் இருந்தும் அவற்றை ஆறு சுவைக்குள் அடக்கிவிட வில்லைங்ா? அவற்றைப் போலவே இதுவும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/172&oldid=681198" இலிருந்து மீள்விக்கப்பட்டது