பக்கம்:பாரதீயம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் #57

நிலையே இல்லை என்பது அவர்களுடையதுணிபு. உலகப் பொருள்கள் எந்த விதமான மன பாவங்களை எழுப்பினாலும் அவற்றை இந்த ஒன்பதற்குள் ஒன்றாகவே பாகுபாடு செய்துவிடலாம். இந்த ஒன்பது சுவைகட்கும் அவர்கள் தனித்தனி பெயர்களிட்டுள்ளனர்.  :

வடமொழி தமிழ்

1. சிருங்காரம் _ 2. கருணம் அழுகை 3. வீரம் பெருமிதம் 4. ரெளத்திரம் வெகுளி 5. ஹாஸ்யம் நகை 6. பயானகம் அச்சம் 7. பீடத்ளலம் இழிவரல் 8. அற்புதம் மருட்கை 9. சாந்தம் (நடுவுநிலை)

என்பனவாகும். இவற்றுள் சாந்த ரஸம் உலகியலின் நீங்கினார் பெற்றியாகலின் அதனை யொழித்து ஏனைய எட்டனையுமே பரத முனிவர் தமது நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பிய னாரும் அவ்வாறே எண் சுவைகளையே கூறியுள்ளார்.”

பாரதியார் பாடல்களில் சுவைகள் : பாரதியார் பெரும் பாலும் வடமொழி அலங்கார நூல்களின் அடிப்படையிலேயே தம் பாடல்களில் ரஸங்களை அமைத்துள்ளபடியால் அந்த அடிப் படையிலேயே அவர் காட்டும் ரஸங்களைக் காண்டது. பொருத்த மாகும்.

சிருங்காரம் : வடமொழி வாணர்கள் சிருங்காரத்தைச் சம் போக சிருங்காரம் (காதலன்-காதலி சேர்ந்திருக்கும் நிலையைச் சித்திரிப்பது) என்றும், விப்ரலம்பசிருங்காரம் (காதலன் - காதலி பிரிந்திருக்கும் நிலையைக் கூறுவது) என்றும் இருபிரிவாகப் பிரித்துப் பேசுவர். காதலியைக் கண்டு உள்ளம் பூரிக்கும்பொழுது அவளை அணுகித் தழுவுவது ஒரு மனநிலை; அப்பொழுது மனத்தை ஒருபுற மாய் நிறுத்தித் தன் காதலியின் அழகிய செயல்களையும் இனிய சொற்களையும் கண்டு மகிழ்வது அதிலும் மேலான மனநிலை.

8. சுவைபற்றி இதற்கு மேல் விளக்கம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் கண்ணன் பாட்டுத்திறன் (சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை - 1) என்ற நூலில் இயல்3 - ல் (ரஸ்த் தைப்பற்றிய ஒரு சிறு விளக்கம்) கண்டு தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/173&oldid=681199" இலிருந்து மீள்விக்கப்பட்டது