பக்கம்:பாரதீயம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 பாரதீயம்

இதனையே சுவைஞர்கள் உயர்ந்ததென ஒப்புக்கொள்வர். இந்த இரண்டு வகையும் சேர்க்கையுள் அடங்கும்.

சாத்திரம் பேசுகின்றாய்-கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடி! ஆத்திரங் கொண்டவர்க்கே-கண்ணம்மா!

சாத்திர முண்டோடி! மூத்தவர் சம்மதியில்-வதுவை

முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப் பேனோ டீ-இதுபார்,

கன்னத்து முத்தமொன்று!”

இதில் நாயகன் நாயகியைக் கண்டு உள்ளம் பூரிக்கின்றான்; அவளிடம் பேச்சுக் கொடுக்கின்றான். வதுவை முறையைப் பின்னர் மூத்தவர் சம்மதியில் செய்வோம் என்று கூறி வேகமாக நெருங்கி நாயகியின் கன்னத்தில் முத்தமொன்று ஊன்றி விதைக்கின்றான்!

இன்னொரு பாடலில் நாயகன்-நாயகியினிடையே காதல் உரையாடல் மட்டிலும் நடைபெறுகின்றது.

‘* . s

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை-முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

யாரிருந் தென்னையிங்கு தடுத்திடுவார்-வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்பசப்பிலே-கணி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ?10

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சம்போக சிருங்காரத்தைச் சித்திரிப் பவையாகும்.

சம்போக சிருங்காரத்தைவிட விப்ரலம்ப சிருங்காரமே. உயர்வு பெற்று விளங்கும். சிருங்காரத்தைப் பிரிவில் வருணிப்பதி லேயே கவிஞர்கள் அதிக மகிழ்ச்சி அடைவர். தலைவன் தலைவி வருக்குச் சினத்தாலும், வேற்று நாட்டிற்குச் செல்வதாலும், சாபத்தா லும் மணந்துகொள்வதற்கு முன் நிகழும் இடையூறுகளாலேயே பலவிதங்களில் பிரிவு நிகழலாம். ஒவ்வொன்றையும் வாய்ப்புக் கிடைத்தபொழுது விரிவாகக் கேட்போர் இன்புறத்தக்க முறையில்

9. கண் ம்ைமா- என் காதலி- (I)— 3. 10. கண்ணம்மா- என் காதலி- (3)- 1, 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/174&oldid=681200" இலிருந்து மீள்விக்கப்பட்டது