பக்கம்:பாரதீயம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் 1.59

சித்திரித்துள்ளனர் வடமொழிப் புலவர்கள். தமிழ் இலக்கியத்திலும் புணர்ச்சி நிலையைக் குறிப்பிடும் குறிஞ்சி, முல்லைத் தினைகளை விடப் பிரிவினைத் தெரிவிக்கும் பாலைத்திணையும், ஏதோ ஒரு வகையில் பிரிவினையே காட்டும் நெய்தலும் மருதமும் அதிக இன்பம் பயப்பதை நாம் நன்றாக அறிவோம்.

கனவு கண்டதிலே- ஒருநாள்

கண்ணுக்குத் தோன்றாமல் இனம் விளங்க வில்லை- எவனோ

என்னகந் தொட்டு விட்டான் வினவக் கண்விழித்தேன்-சகியே மேனி மறைந்து விட்டான்; மனதில் மட்டிலுமே- புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி:

பாரதியாரின் இந்த பாடல் விப்ரலம்ப நிலையைச் சித்திரிக் கின்றது. பாரதி நாயகி தன்னுடைய பிரிவு நிலையை அற்புதமாகப் புலப்படுத்துகின்றாள். கனவில் கண்ட காதலன் மறைந்துவிட்ட போதிலும் அவள் மனத்தில் தன் பிரிவினால் புதியதோர் மகிழ்ச் சியை விளைவித்துவிடுகின்றான். தான் பெற்ற அந்த மகிழ்ச்சியைஇன்ப உணர்ச்சியைத் - தன் தோழிக்கு அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றாள்.

கருணம் : இந்த ரஸம் சோகம் என்ற ஸ்தாயி பாவத்தால் பிறப்பது. நம் நாட்டுக் கவிஞர்கள் ஒரு காவியத்தில் அல்லது நாடகத் தில கருண ரஸ்மே கடைசி வரையில் நிற்க வேண்டும் என்று பாடுபட வில்லை. ரஸம் என்ற மட்டில் கருணத்திற்கு ஒரு குறைவுமில்லை. ஆயினும், துக்க உணர்ச்சியே அதன் நிலைக்களமாதலால் அதனை மேலை நாட்டாரைப்போல் சிறப்பாக வளர்க்கவில்லை.

தமிழில் கருணம் அழுகை என்று வழங்கப்பெறும். அழுகை என்பது, அவலம்: இரக்கம். தொல்காப்பியர் கருத்துப்படி அவலம் தானே அவலித்தலும், பிறர் அவலங்கண்டு அவலித்தலும் என இரு வகைப்படும். பின்னது கருணம் என்றும், அஃதுடன் சுவை ஒன்பது தாதலும் உண்டு என்றும் கூறுவர் பேராசிரியர். துச்சாதனனால் தலைவிரிகோலமாக அவைக்கு இழுத்துவரப்பெற்ற திரெளபதி நீதி கேட்டழுகின்றாள்.

11. கண்ணன்- என் காதலன்.--(1)-5.

12. விரிவான விளக்கத்தை இவ்வாசிரியரின் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.14) என்ற நூலில் 22-வது கட்டுரை 2. அழுகை என்ற தலைப்பிலுள்ளவற்றைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/175&oldid=681201" இலிருந்து மீள்விக்கப்பட்டது