பக்கம்:பாரதீயம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம்

f

6

{}

விம்மி பழுதாள்-விதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ

இப்பாடற்பகுதியில் திரெளபதி பண்டைய நிலை கெட்டு வேறொரு வாறாகிய நிலையை நினைந்து அழுகின்றாள். இதில் கருன ரஸத்தைக் கண்டு அதுபவிக்கலாம்.

திரெளபதியின் நிலை கண்டு வீடுமன் அவளிடம் பேசுகின்றான்:

சூதிலே வல்லான் சகுனி தொழில்வழியால் மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான். மற்றிதணி லுன்னையொரு பந்தயமா வைத்ததே குற்றமென்று சொல்லுகிறாய், கோமகளே, பண்டையுக வேத முனிவர் விதிப்படி, நீசொல்லுவது நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது : ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக் கொப்பில்லை மாதர், ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம், முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.14

இதில் பண்டைய நிலைமை கெட்டு வேறொருவாறாகிய நிலையைக் கண்டு விடுமன் தனக்குத் தீங்கு தடுக்கும் திறமின்மைக்கு வருந்து கின்றான்.

வீரம் : எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனம் குன்றாமல் விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பவனே வீரனாவான். தவிர, ஆயுள் முழுவதும் தனது புலன்களை அடக்கப் பாடுபடுவதுங்கூட விரத்தின் அடையாளம் ஆகும். (எ.டு.) வீடுமன், தலை அறுபட்ட பிறகும் முண் டங்கள் கையில் ஏந்திய கத்தியோடு வீரனொருவன் பகைவரோடு சிறிது நேரம் போரிட்டதாகப் புராணங்களில் போர் வருணனையில் கான் வாம்.(எ.டு.) கும்பகருணன். சிபிச்சக்கரவர்த்தி ஒரு புறாவின் உயிரைக் காத்தற்பொருட்டுத் தன் தொடையிலிருந்து தசையை அறுத்துக் கொடுத்ததும், அரிச்சந்திரன் சத்தியத்தை நிலைநாட்ட நினைக்க வும் முடியாத துன்பத்தை அதுபவித்ததும் வீரத்தின் தோற்றங்கள் என்று ஏற்க வேண்டும். இதில் பெரியோர்கள் ஒரு வரம்பு கட்டி யிருக்கின்றனர். எத்தகைய துன்பம் நேரிட்டாலும் அதனைச் சிறிதும்

13. பா. ச. 5. 53 : 27-30. 14. டிெ. 5, 6 : 53-64.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/176&oldid=681202" இலிருந்து மீள்விக்கப்பட்டது