பக்கம்:பாரதீயம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாரதீயம்

முடைய சொத்தையும் பறிக்க வழி தேடின. கொடியவன் துரியோத னன். அவனை நான் விட்டு வைக்கப் போவதில்லை. அவனுக்குத் துணை செய்த துச்சாதனனையும் விட்டுவிட மாட்டேன். கண்ணன் பதத்தில் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். துரியோதனனின் தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன். தம்பி துச்சாதனனின் தோள்களைப் பிய்ப்பேன். உன் அண்ணன் சமாதானம் செய்து கொள்ளட்டும். நான் போர் தொடுக்கிறேன். இன்று ஒருநாள் அவர் எனக்கு அண்ணனும் அல்லர்; நான் அவருக்குத் தம்பியும் அல்லன் என்கின்கின்றான். இத்தகைய மனோவேகந்தான் குரோதம்: என்பது. இதனை வீரத்திற்கு உறுப்பாகவும், அளவு கடந்து நிற்கும் வீரத்தின் நிலை என்றும் கூறலாம். நாட்டியக் கலையில் பரத முனிவர் ரெளத்திர ரஸ்த்தில் இருந்து கருணம் ஏற்படுவதாகக் கூறுவர். மேலும், குரோதம் என்பது மனிதனுடைய பகுத்தறிவைக் கீழடக்கிப் பொங்கி எழும் ஓர் உணர்ச்சி. அஃது ஒரு பேயின் வேகத் தோடு கிளம்புவதால் அதன் செயல்கள் பின்னர் வருந்தத்தக்கவை யாகவே இருக்கும். குரோதம் கொண்டவன் குருவையும் கொல் வான் என்பது முதுமொழி. பரசுராமர், தம் தந்தைக்குக் கார்த்த வீரியன் அவமானம் விளைவித்ததால் rத்திரிய குலத்தையே குரோ தத்தால் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார். முடிவில் தம் யோசனை இல்லாச் செய்கையை நினைத்துப் பலவிதத்தில் வருந்திய தாகவும் வரலாறு கூறுகின்றது.

மாடு நிகர்த்த துச்சாதனன் திரெளபதியின் மைக்குழல்பற்றி இழுப்பதைக் கானும் வீமனுக்குக் கரைமீறி எழுகின்றது வெஞ்சினம். தருமனை நோக்கிப் பேசுகின்றான். அந்தப் பேச்சின் இறுதிப் பகுதி:

துருபதன் மகளைத்-திட்டத்

துய்ம னுடற் பிறப்பை இருபகடை யென்றாய்- ஐயோ! இவர்க் கடிமை யென்றாய்! இது பொறுப்பதில்லை,- தம்பி!

எரிதழல் கொண்டுவா கதிரை வைத்திழந்தான்- அண்ணன்

கையை எரித்திடுவோம். 15

என்று வீமன் சகதேவனிடத்தில் சொல்லும் பேச்சில் வெகுளிச் சுவை கொப்புளித்து நிற்பதைக் காணலாம். -

ஹாஸ்யம் : தமிழில் இச்சுவை நகை என்று வழங்கப்பெறும். இயற்கைக்கு ம்ாறாக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது TTTT68 : 280_281.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/178&oldid=681204" இலிருந்து மீள்விக்கப்பட்டது