பக்கம்:பாரதீயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாரதீயம்

ஆசிரியர்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் சிறப்புடன் திகழ முடியாது போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். ஆசிரியனிடம் திறனிருந்தும் ஏற்ற சூழ்நிலை அமையாமையால் அவன் படைப்பு சிறப்புடன் மிளிர்வதில்லை. படைப்புக்கேற்ற சூழ்நிலை அமைவது அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு கோக்குமிடத்து, பாரதியார் வாழ்ந்த காலம் அவர்தம் படைப்பாற்றலுக்குக் கைகொடுத்து உதவிற்று; அவர் வாழ்ந்த சூழ்நிலையும் தக்க முறையில் துணை செய்தது. தனிச் சிறப்புடன் செயற்பட்ட அவர்தம் தனித்திறமையும் நிகழ்ச்சிகளுக்குத் தம் கற்பனைத் திறனால் புது மெருகூட்டும் பாங்கும் கலந்து அவர் காபெரும் கவிஞராக மலர வழி ஏற்பட்டது.

பாரதியார் வாழ்ந்த காலம், நாட்டில் பெரும் குறைகள் மலிந்து நிலவிய காலம். 5ம் நாடும் அன்னியர் ஆட்சியில் அடிமை நாடாக அடங்கிக் கிடந்தது. காட்டு மொழிகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் ஆக்க வழிகட்கும் வாய்ப்பு இல்லை. சமுதாயத்திலும் ஆணின் கையே மேலோங்கி இருந்தது; பல வகைகளில் பெண்ணுக்கு உரிமை இல்லாதிருந்தது. சமயப் பிணக்கும் ஆங்காங்குத் தலைதூக்கிய வண்ணம் இருந்தது. தற்சாதிப்பற்று என்ற கொடுமை சமூகத்தை ஆட்டிவைத்தது. இச்சூழ்நிலைதான் பாரதியார் வாழ்ந்த சூழ்நிலை. இச்சூழ்நிலையில்தான் பாரதியாரின் பாடல்கள் முகிழ்த்தன. எனவே, காட்டுப்பற்று, விடுதலை வேட்கை, தாய்மொழிப்பற்று, சமுதாய முன்னேற்றம், பழமையில் புதுமை, பெண் விடுதலை, அறிவுத் தெளிவு-இவை யாவும் பாரதீயங்களாயின.

பழமைவின் அடிப்படையில் புதுமை : பண்டிருந்து இன்றுவரை எழுந்த இலக்கிய இலக்கணங்களை நோக்கின், தமிழ் நூல்கள் பழமைப் பற்றுடையனவாகவே அமைந்து வருவதைக் காணலாம். இலக்கிய இலக்கணங்கள் தோன்றிய காலத்தில் சமூகம் பழமை எய்திவிட்டது: மக்கள் கினைவோட்டத்தில் அடிச்சுவடுகள் தோன்றி விட்டன. மக்கள் அச்சுவடுகளிலேயே செல்லத் தொடங்கினர். மனிதன் கண்ட மொழி என்ற ஓர் அற்புதக் கருவியின்றிச் சிந்திக்கும் ஆற்றல் செயற்பட முடியாது போய்விட்டது. சொற்களும் சொற் றொடர்களும் மரபாகிவிட்டன : குறியீடுகளாக நின்று பொருள் களை உணர்த்தத் தொடங்கிவிட்டன. ஆகவே, எதிலும் ‘புதுமை’ என்ற ஒரு தனித்துவத்தைக் காண்டல் அரிது. தனிப்புதுமை’ என்பது குதிரைக் கொம்பு. பழயவற்றைப் புதுக்கின பிறகு அவற் றைப் புதுமை’ என்று புகழாரம் குட்டுகின்றோம். பாரதியாரையே நாடு புதுமைக் கவிஞர் என்று போற்றுகின்றது: அவரும் சுவை புதிது, பொருள் புதிது என்றும் பெருமைப்பட்டுக்கொள்கின் றார். மக்கள் யாவரும் ஒருமனத்துடன் இப்பெருமைக்கு அவர் உய்வது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/18&oldid=681206" இலிருந்து மீள்விக்கப்பட்டது