பக்கம்:பாரதீயம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள்

லாகக் காண்கின்றார். பாடலைப் படிக்கும் நமக்கும் அக்காட்சியைக் காட்டி நம் அகத்தில் வியப்புணர்ச்சியை எழுப்புகின்றார்; நாமும் அற்புத ரளத்தை மாந்திக் களிக்கின்றோம்.

சாந்தம் : தொல்காப்பியரும் பரத முனிவரும் சுவைகளை எட்டு என்று அறுதியிட்டாலும் இவற்றிற்கு அப்பாலும் ஒன்று: உண்டு என்பதாக நம் பண்டைய அறிஞர்கள் சிந்தித்துள்ளனர். இது வடமொழியில் சாந்த ரஸம் என்றும், தமிழில் நடுவு நிலைமை: என்றும் குறிக்கப்பெறும். இதனையும் விளக்குவது இன்றியன்ம யாததாகின்றது. அமைதி, ரஸங்களுக்கு அடிப்படையான நிலையா யிருப்பதால் அதற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. எல்லா ரஸங்களும் சாந்த நிலையில் நின்று எழுந்து சாந்தத்திலேயே அடங்கிவிடுகின்றன என்று பண்டைப் பெரியோர்கள் கருதுவர். இதில் உண்மை இல்லா மல் இல்லை. ஒரு பொருள் உருவெடுப்பதற்கு முன் சமநிலையில் தான் இருந்திருக்க வேண்டும். அங்கனமே உருவழிந்த பிற்கும் சமநிலையைத்தான் அஃது அடைய வேண்டும். இவ்வுண்மையை எவரும் எளிதாக உணரலாம். அவ்விதமே ரஸங்கள் உருவெடுத்து நிலைத்து மடியும் இடத்தைச் சாத்தம் என்று வழங்குவர் அப் பெரியார்கள். சாந்தம் என்பதை அவர்கள் ஒரு ரஸ்மாக ஒப்புக் கொள்ளாவிடினும், அந்த நிலையை அவர்கள் மறுப்பதில்லை.

சாந்தம் என்பது மாமுனிவர்களின் உள்ளத்தில் குடிகொண் டிருக்கும் ஒரு நிலை, இந்நிலையை சலத்தைப்பற்றி ஆராய்பவர்கள் சிறிதும் அறியாமலிருப்பர். ஆப்டியிருந்தால் அதை அவர்கள் மறுப்பதில் சிறப்பான கருத்து இருப்பதற்கு இடம் இல்லை. இதனை ஆனந்த வர்த்தனாசிரியர், பலருடைய அநுபவத்தில் இல்லை யென்பதனால் மட்டும் ஓர் உயர்ந்த ரஸ்த்தை மறுப்பது அதியாய மாகும். ஓர் அறிஞனுக்குத் தோன்றிய விஷயம் பல்லாயிரச் சாதா ரண மனிதர்கட்குப் புலப்படாமலேயே இருக்கலாம். அதற்காக அவ்விஷயத்தைப் புறக்கணிப்பது எளிதன்று என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறுவர்.

உலகில் பற்றில்லாமலிருப்பது ஒர் உயர்ந்த மனநிலை. அற்றது பற்றெனில் உற்றது வீடு. உண்மையில் பற்று அறவே நீங்க வேண்டு மானால் மன்த்தில் விருப்பும் வெறுப்பும் ஆசையும் பகையும்; நீங்க வேண்டும். ஒரு பொருளில் விருப்பம்வத்துவிட்டால் நம்மனமே அப்பொருளை மற்றவற்றைக்காட்டிலும் உயர்ந்ததாகக் கருதுகின் றது. அவ்விதமே வெறுப்பும்.ஒன்றில் ஏற்பட்டுவிடின் அதனை மனம் இழிந்ததாகவே கருதிவிடும். ஆகவே விரும்பும் லெறுப்பும்-ஆசை கம் பல்ஜல்டி-இருக்கும்வ்ரை கனத்திற்குக் கதிலை அல்லது சாந்தநிலை நிலவாது:ன்பது த்ெளிவாகும். ஆதல்ைதான் ஜெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/185&oldid=681212" இலிருந்து மீள்விக்கப்பட்டது