பக்கம்:பாரதீயம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாரதீயம்

யோர்கள் சமநிலையைப் பெறுவதற்குத் தவம் செய்து பாடுபடுகின்ற னர். சமம் ஒர் உயர்ந்த மனநிலை. அதனை எய்தப்பெற்றவன் சாமானிய மனிதனைப்போல் இருப்பதில்லை. அவன் வேறு வித மாகவே தோற்றுவான். அத்தகைய மகான்களைப்பற்றியும் கவிஞர் கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு எடுத்துக்காட்டுகள் இந்நிலையைத் தெளிவாக்கும். -

(1) மகளிர் நீராடப்போகும் வழியில் ஒரு மண்கட்டியைத் தலையணையாக வைத்துக்கொண்டு சதாசிவப் பிரம்மம் படுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற மகள் ஒருத்தி பாரடி, இந்தச் சதாசிவக் கட்டைக்குத் தலைக்கு உயர்ங்கூட வேண்டியிருக் கிறது! என்று பரிகாசமாகச் சொல்லிப் போனாள். இதனைச் செவி புற்ற சுவாமிகள், ஆ. நமக்குத் துறவு பூண்ட பிறகுகூடத் தலைக்கு உயரத்தால் ஏற்படும் இன்பத்தில் நாட்டம் ஏற்பட்டது தவறு என்று அதனைத் தள்ளிவிட்டுப் படுத்திருந்தார். நீராடித் திரும்பியபோது முன் பரிகசித்த அதே மகள் ஐயையோ! பார்த்தாயா? இந்தச் சதாசிவக் கட்டைக்கு ரோஷம் வேறு. என் பரிகாசம் அந்தக் கட்டைக்கு ரோஷத்தை உண்டாக்கிவிட்டது போலும்! என்று கூறினாள். உடனே சதாசிவ பிரம்மம் அம்மண்கட்டியை எடுத்து மறுபடியும் தலைக்கு வைத்துக்கொண்டார், பிறர் சொல்லுக்குத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது சரி அல்ல என்று கருதி.

(2) இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு சமயம் தம் மனைவி யுடன் வாரணாசியை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு தங்கத் துண்டு கிடந்தது. அதைத் தம் துணைவி கண் டால் ஆசைப்பட்டுவிடுவாள் என்று கருதிய இராமகிருஷ்ணர் அதனை மறைக்க முயன்றார். அச்செயலைக் கவனித்த அவர் துணைவி என்ன அது? தாங்கள் எதையோ மூடுகின்றீர்க்ளே என்று வினவினாள், வேறு வழியில்லாமல் பரமஹம்ஸர் உண்மையை நவில் வேண்டியதாயிற்று. உடனே அந்தத் தேவி, உங்களுக்கு இன்னும் தங்கம் வேறு, மண்கட்டி வேறு என்ற வேற்றுமை தெரி கின்றதா என்று கேட்டாள். -

இந்த நிகழ்ச்சிகளைப் படிக்கும் நம் மனத்திலும் சம உணர்ச்சி குடிகொள்ளும் அதிலும் ரஸ் இன்பத்தை நாம் துய்க்கலாம். மேற் கூறிய இரண்டு நிகழ்ச்சிகளும் நமக்குச் சாந்தநிலை கிட்டுவது அரிது என்பதை விளக்கினாலும் சாந்து ரஸ்த்திற்கே அவை எடுத்துக்க்ாட்டு களாக அமைவதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. பாரதி யார் பாடல்களைப் படிக்கும் நம்க்கு, அவர் எவற்றிற்கெல்லாம் பாடு கட்டாலும், அவர் மனம்'அமைதியை-சாந்த நிலையை-நாடியிருந் தது என்பது தெரியாடி கைாது தோத்திரப் பாக்களும் வேதாந் தங் மாக்களும் இந்நிலையைத் தெளிவாக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/186&oldid=681213" இலிருந்து மீள்விக்கப்பட்டது