பக்கம்:பாரதீயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 3

கின்றார் என்று ஒப்புக்கொள்கின்றனர். ஆழ்ந்து நோக்கினால் பாரதியாரிடம் காம் காணும் புதுமைகள் யாவும் பழமையின் அடிப் படையிலேயே அமைந்தவை என்பதை அறிகின்றோம்; தெளிகின் றோம். இதன் விளக்கத்தை அடியில் காண்போம்.

காட்டுப்பற்று : தாம் பிறந்த நாடு தமிழகமாயினும் பாரதியார் கண்ட நாடு, பாரத நாடு. அவர்தம் தேசியப் பார்வை மிக விரிந்தது. தமிழகத்தையும் பிற பகுதிகளையும் பாரதப் பெருநாட்டின் அகப் பகுதிகளாகவே நோக்கினார். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மரபுவழிவந்த தமிழ் மகனிடம் குறுகிய கோக்கு எங்ஙனம் முகிழ்க்கும்? பாரத நாடு முழுவதும் அடிமைப்பட்டிருந்த நிலையில் தமிழக விடுதலையை மட்டிலும் பிரித்துப் பாடும் குறிப்பு அவர் பாடல்களில் இருக்கமுடியுமா? எனவே, விரிந்த மன நிலையைக்கொண்ட அவர் பாரதத்தைப் பாரத மாதாவாகவே-இந்தியத் தாயாகவே - காண் கின்றார்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இங்காடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே.” என்று காட்டை வணங்கிப் போற்றுகின்றார்.

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.” என்ற கொடிவணக்கப் பாட்டில், பல்வேறு காரணங்களால் சிதறுண்டு கிடக்கும் மக்களை அறைகூவி அழைக்கின்றார்: ஒரு கொடிக்கிழ் வந்து திரளுமாறு பணிக்கின்றார். இதனை அக நாட்டார் அனை வருக்கும் விடுக்கும் அழைப்பாகக் கொள்ளலாம். தமிழ் மொழியைக் கன்னித் தமிழாகவே - ஆற்றல் மிக்க மொழியாகவே - கானும் தமிழ் மரபில் வந்த கவிஞர், பாரத மாதாவையும் கன்னிகை"யாகவே காண்கின்றார். பாரத மாதாவை,

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்

சிந்தனை ஒன்றுடை யாள்.”

3. புறம் 192 4. நாட்டு வணக்கம் - 1 5. தாயின் மணிக்கொடி - பல்லவி 6. எங்கள் தாய் - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/19&oldid=681217" இலிருந்து மீள்விக்கப்பட்டது