பக்கம்:பாரதீயம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பாரதீயம்

  • அந்திப் பொழுது என்னும் கன்னி பகலென்னும் கட்டழகனைக் காதலிக்கின்றாள். அவள் உள்ளத்தில் ஊறும் காதல் வெள்ளம் அவளுடைய கட்டுக்கடங்கவில்லை. அது மட்டிலாத வேகத்துடன் வானம் முழுவதும் செவ்வெனப் படர்ந்து கிட்க்கின்றது. அவள் என்ன செய்வாள், பாவம்? விடா முயற்சியோடு தன் காதலனாகிய பகலவனைப் பின்தொடர்ந்து ஓடுகின்றாள். அவன் திரும்பியும் நோக்குவதில்லை. ஒரு கணம் காதலியின்பால் இரக்கம் காட்டி நிற்பதுமில்லை. இது தெய்வத்தின் திருவிளையாடல்: இங்ஙனம் கவிஞன் தன் உள்ளத்தின் உணர்ச்சியைக் காட்டியுள்ளான். பகலை ஆணாகவும் அந்தியைப் பெண்ணாகவும் கூறுவது நம் நாட்டுக் கவிஞர்களிடையே வந்த மரபு. அவற்றை அழகிய படிமமாய்ப் (உருக் காட்சியாய்ப்) பாவித்து நமக்கு அளிக்கின்றான் கவிஞன். இத்தகைய அநுபவம் நமது கட்புலனால் ஏற்படுகின்றது.

பாரதியாரின் பாடல்களில் இத்தகைய ஓர் அநுபவ நிலையைக் காணலாம். இயற்கையையும் பிறவற்றையும் அவர் அநுபவித்ததைப் போலவே அவர் தம் பாடல்களின்மூலம் நம் புலன்களின் துணை கொண்டு நாமும் அநுபவிக்கலாம். கவிஞன் தன் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத் தருகின்றான். உருக்காட்சிகள் (படிமங்கள் - images), சிந்தனை இவற்றின் குறி யீடுகளாகப் (Symbols) பணிபுரிகின்றன என்பதை நாம் அறி வோம். கவிதையின் உருக்காட்சி (படிமம்) சொற்களின்மூலம் நம் புலன்களைத் தொடுகின்றது. புலன்களின்மூலம் படிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் தூண்டப்பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையில் படிமம் அதிகமாகப் பயன்படுகின்றது.” அவர் மேலும் கூறுவது: செலுத்தப்பெறும் புலன்களுக்கேற்பப் :படிமம் வகைப்படுத்தப்பெறுகின்றது. ஆகவே, நாம் பெறுபவை: கட்புலப் படிமங்கள் (Visual images), (இவற்றில் வண்ணப் படி மங்களும் வடிவப் படிமங்களும் அடங்கும்), செவிப்புலப் படிமங்கள் (Auditory images), dissouritjor Lily losii (Gustatory images), நாற்றப்புலப் படிமங்கள் (Olfactory images), தொடுபுலப் (நொப் புலப்) படிமங்கள் (Tactualimages).இவற்றைத் தவிர, இயக்க நிலைப் Lit tofissir (Kinaesthetics images), ug Listeoart Lit teiiseit (Conventional images) என்பவையும் உள்ளன. இவை தனியாகவும் ஒன்று இரண்டு பலவுமாக இணைந்து கலவைப் படிமங்களாகவும் கவிதையில்

1. படிமம்- Imagery

2. Burton, N: The Criticism of Poetry (Longmans and

Green Co . London) u 97.

3. மேலது-பக். 99.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/190&oldid=681218" இலிருந்து மீள்விக்கப்பட்டது