பக்கம்:பாரதீயம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 75

அமைகின்றன. மேலும் குறியீடுகளாக அமையும் சொற்கள் கட் டுண்ட படிமங்களையும் (Tied images) விடுதலைப் படிமங் களையும் (Free images) உண்டாக்கிப் பங்கப்போரிடையே ஒத் assifiej gavgsouth (Sympathetic response), so to La sirGib 5evt gratuii (Empathetic response) etapul j6?gr றன. இவற்றால் கவிதையதுபவம் - முருகுணர்ச்சி-கொடுமுடியை எட்டுகின்றது. இந்தக் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு பாரதியாரின் பாடலல்களை ஆராய்வோம். அப்பெருமகனின் முருகி பல் நோக்கு அவர்தம் கவிதைகளில் எவ்வாறு படிமங்களாக அமைந் துள்ளது என்பதையும் காண்போம்.

கட்புலப் படிமங்கள் : பாண்டவர்கள் அத்தினபுரத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் நடுவில் மாலைக்காலம் வருகின்றது. மன்னனின் சேனை வழியிடையில் ஒரு பூம்பொழிலில் தங்கியிருந்த பொழுது, பார்த்தன் பாஞ்சாவிக்குப் பரிதியின் எழிலை விளக்குகின் றான். செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்டாய் என் 3 கூறி,

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;

கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாக் களிப்புத் தோன்றும்;

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்

காளிபரா சக்திஅவள் களிக்கும் கோலம் கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்க் என்ற பாடலில் கட்புலப் படிமங்களில் வண்ணப் படிமங்கள் பல இணைந்து ஓர் அற்புதக் கலவைக் காட்சியினை நம் மனத்தில் தோற்றுவித்து நம்மைப் பூரிப்படையச் செய்கின்றன, இன்னும் இதே பகுதியில் பரிதியை பரிதிக்கோளம், மின் செய்த வட்டு, பச்சை நிற வட்டம்: என்றும்,

இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி

எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தை’

இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் எண்ணில்லா திடையிடையே எழுதல்: என்றும் வரும் பாடற்பகுதிகளில் பரிதியை விளக்கும் வடிவப் படிமங் களைக் கண்டு மகிழலாம். மேலும் எத்தனை வடிவம், நீலப்பொய் கைகள்!!, நீலவன்னமொன்றில் எத்தனை வகையிடீ எத்தனை

4. பா.ச.அழைப்புச் சுருக்கம்-149.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/191&oldid=681219" இலிருந்து மீள்விக்கப்பட்டது