பக்கம்:பாரதீயம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் i 79

என்பதில் அன்னையர் கூறும் மழலை மொழிகள் கேட்கின்றன :ைல்லவா?

இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம்

தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்

தாவிக் குதிப்பாள்ளம் அன்னை’

இதில் ஏற்றும் அலைத்திரளின் ஒலி கேட்கின்றது. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியில் ஒரு பாடல்:

புள்ளினம் ஆர்த்தன: ஆர்த்தன முரசம்;

பொங்கியது எங்கும். சுதந்திர நாதம்:

வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!

வீதியெ லாம்.அணு குற்றனர் மாதர்:

தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன்.

சீர்த்திரு நாமமும் ஒதிநிற் கின்றார்; (2)

இப்பாடலைப் படிக்கும்போதே நம் மனக்காது புள்ளினத்தின் ஆர்ப் பையும், முரசத்தின் ஆர்ப்பையும், சுதந்திர நாதத்தையும், சங்கின் முழக்கத்தையும், அந்தணரின் வேத ஒலியையும் கேட்கின்றதன்றோ?

கூறு படப்பல கோடி அவுனரின் கூட்டத்தைக்-கண்டு

கொக்கரித் தண்டங் குலுங்க

நகைத் திடுஞ் சேவலாய் !! :

இதில் வேலன் சேவலின் கொக்கரிப்பொலி நம் மனக் காதில் விழு கின்றது.

சுவைப்புலப் படிமங்கள் : இவ்வகைப் படிமங்கள் அரியன வாகவே காணப்பெறுகின்றன. இவற்றையும் தேடிக் காண்போம். பாஞ்சாவி சபதத்தில் கலைமகளைக் கற்பனைத் தேனிதழாள் என்று கவிஞர், உரைக்கும்போது நம் மனம் தேனின் சுவையை உணர்கின்றது. திருதராட்டிரனின் நல்லுரைகளைக் கேட்ட துரி யோதனன் கடுஞ்சினமுற்றுப் பேசுவான்;

-கெட்ட

மிக்க சருக்கரை பாண்டவர்

11. .ை வெறி கொண்ட் தாய்-2, 12. தோ.பா. வேலன் பாட்டு டி3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/195&oldid=681223" இலிருந்து மீள்விக்கப்பட்டது