பக்கம்:பாரதீயம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 பாரதீயம்

கொண்டை முடிப்பதற்கே-மணங்

கூடு தயிலங்களும்’

இந்தப் பகுதியைப் புடிக்கும்போது மணப்பொருள்களை விற்கும் அங்காடியில் நாம் பெறும் வாசனையைப் போன்ற வாசனையை நம் ‘மன மூக்கு உணரத் தொடங்குகின்றது.

கொப்புலப் படிமங்கள் : இந்த நுண்ணிய படிமங்களும் கவிதைக்குப் பொலிவூட்டுகின்றன. துரியோதனின் பொறாமைத் தீயை வருணிக்கும் கவிஞர்,

குன்ற மொன்று குழைவுற் றிளகிக்

குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம் கன்று பூதலத் துள்ளுறை வெம்மை •

காய்ந்தெ ழுந்து வெளிப்படல் போல’ என்று கூறும்போது வெப்ப உணர்ச்சி தட்டுப்படுகின்றது. பொறா மையைத் தீ என்று உருவகித்ததைப் போலவே சினத்தையும் தீ என்று உருவகிப்பார் பாரதியார். இன்ப நிகழ்ச்சிகளில் பொழுது போக்குமாறு தந்தை கூறுவதைச் செவிமடுத்த சுயோதனன் சினங் கொள்ளுகின்றான்.

- கோமகன் வெந்தழல் போலச் சினங்கொண்டே- தன்னை,

மீறிப் பலசொல் விளம்பினான்(62)

என்று இதனைக் கவிஞர் கூறும்போதும்,

- நெஞ்சைத் தின்னும் கொடுந்தழல் கொண்டவர் - சொல்லுஞ்

செய்தி தெளிய உரைப்பரோ?(63) என்ற சகுனியின் பேச்சிலும் இந்த வெப்பத்தை நம் மனம் உண்ர் கின்றது. சகுனி தருமனிடம் அவனுடைய சகோதரர்களைப் பணயப் பொருளாக வைக்குமாறு கூறியதைக் கேட்டு,

கங்கை மைந்த னங்கே- நெஞ்சம்

கனலுறத் துடித்தான்: பொங்கு வெஞ்சினத்தால்-அரசர்

புகையுயிர்த் திருந்தார்(228) என்று பிதாமகன் அடைந்த நிலையையும் அவையிலிருந்த அரசர்கள் அடைந்த நிலையையும் கவிஞர் க்ளிட்டுவ்தில் இந்த வெப்ப உணர்ச் சியை உணர்கின்றோம்,

16. கண்ணன்-என் காந்தன்-1 17. - : 1.5 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/198&oldid=681226" இலிருந்து மீள்விக்கப்பட்டது