பக்கம்:பாரதீயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாரதீயம்

என்று படைத்துக் காட்டும்போது வேற்றுமையில் ஒற்றுமை (Unit in diversity) காணும் கவிஞரின் பாரதப் பண்பைக் காண முடிகின்றது. மேலும், அறுபது கோடி தடக்கைகள் உடையவள் என்னும், இக்கைகளால் அறங்கள் நடத்துவாள் என்றும் மொழி கின்றார்.

கீலத் திரைக்கடலோரத்திலே - கின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.”

என்று தமிழ்நாட்டிற்கு எல்லை வகுத்தது, வடவேங்கடம் தென் குமரி என்ற பண்டைய தொல்காப்பிய மரபையொட்டியேயாகும். ஆனால், அடிமைத்தளையை அகற்ற வேண்டும் என்று அவாவி திற்கும் கவிஞர் இந்திய ஒருமைப்பாட்டையே நாடுகின்றார். இதனால் குழந்தைப் பாடலிலேயே பிஞ்சு மனங்களுக்கு,

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா !

கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா :

என்று காட்டின் வழக்கு எல்லையை வரைந்து காட்டுகின்றார். பிறிதோர் இடத்தில்,

பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும். ஆரியகா டென்றே யறி.”

என்று இந்த எல்லையைக் குறிப்பிடுகின்றார். எனவே, பாரதியின் பாரதப் பாடல்கள். தமிழ்மொழிக்குப் புதியவை : தமிழர்களிடம் அகன்ற நோக்கை - விரிந்த பார்வையை - உண்டாக்கக்கூடியவை. எந்த மொழியிலிருப்பினும் உயர்ந்த சிந்தனையையுடைய பாடல்கள் மற்றைய மொழிகளில் பெயர்க்கப்பெற்று நாட்டின் பொதுச் சொத் தாக ஆக்கப்பெறுதல் வேண்டும். தமிழ்மொழியில் திருக்குறள் இருப் பினும் அது உலக மொழிகளிலெல்லாம் பெயர்க்கப்பெற்று உலகப் பொதுச் சொத்தாகிவிடவில்லையா ? அது போலவே, பாரதியாரின் பாடல்கள் மொழிபெயர்ப்புகளின் மூலம் காட்டின் பொதுச் சொத்தாக ஆக்கப்பெறுதல்வேண்டும். குறிப்பாகத் தாயின் மணிக்

7. செக்தமிழ் காடு - 5

8. பாப்பாப் பாட்டு'- 13

9. பாரத தேவியின் திருத்தசாங்கம்-2 10. தேசிய கீதங்கள்’ என்ற தலைப்பிலுள்ள பல பாடல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/20&oldid=681228" இலிருந்து மீள்விக்கப்பட்டது