பக்கம்:பாரதீயம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பாரதீயம்

இயக்கநிலைப் படிமங்கள் : இந்த வகைப் படிமங்களும் கவி கதக்குப் புது மெருகூட்டுகின்றன. அத்தினபுர வீரர்களைக் காட்டும்,

மாலைகள் புரண்டசையும்-பெரு வரையெனத் திரண்டவன்.தோளுடையார்

என்ற அடிகளில் புரண்ட்சையும் என்பதில் இயக்க நிலையை உணர் கின்றோம். சகுனியின் சூழ்ச்சித் திறனை மெச்சிய துரியோதனின் மகிழ்ச்சியை,

பொங்கும் உண்கையின் மார்புறக்-கட்டிப்

பூரித்து விம்மித் தழுவினான்

என்ற சொற்களில் இயக்கநிலைப்படிமங்கள்தட்டுப் படுகின்றதன்றோ?

“நீரமுதம் எனப் பாய்ந்து நிரம்பும் நாடு:

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன் கணக்கிற சுழன்றிடும் சக்கரம்:

கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்’

அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்

அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்: வடிவான தொன்றாகத் தகடி ரண்டு

வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்: ‘இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்; இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானுலார் இயம்பு கின்றார்!’

இவண் காட்டியுள்ள அடிகளிலெல்லாம் இயக்கநில்ைப் படிமங்கள் தென்படுவதைக் காணலாம்:

கண்ணன் பர்ட்டிலும் இயக்கநிலைப் படிமங்கள் கவிதையைக் கவினுறச் செய்வதை அறியலாம்.

தேர்நடத் திக்கொடுப்பான்(1) ஆட்டங்கள் காட்டியும்:t)

பாசியை யெற்றி விடும்-பெரு வெள்ளத்தைப் போல்(1)

$5G (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/200&oldid=681229" இலிருந்து மீள்விக்கப்பட்டது