பக்கம்:பாரதீயம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 187

கடிகமழ் மின்னுருவை,- ஒரு

கமனியக் கனவினை காதலினை வடிவுறு பேரழகை. ....25

இப்படிப் போகின்றது. திரெளபதிபற்றிய சொல்லோவியம். இதில் கடபுல், செவிப்புல, இயக்கப்புலப் படிமங்கள் அமைந்து திரெளபதியை நம் மனம் காணச் செய்கின்றன.

கண்ணன் பாட்டிடிலும் சில கலவைநிலைப் படிமங்களைக் கண்டு மகிழ்வோம்.

பிள்ளைக் கணியமுதே,- கண் ணம்மா

பெசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத் திடவே- என்முன்னே ஆடிவருத் தேனே!?? -

இதில் கனியமுது, தேன் இவை சுவைப்புலப் படிமங்களை எழுப்பு வன;பேசுதல் செவிப்புலப் படிமம்; பொற்சித்திரம் கட்புலப்படிமம்: ஆடி வருதல் இயக்கப்புலப் படிமம்: அள்ளி அணைத்திடுதல் தொப் புலப் படிமம். இந்த நான்கு வண்கப் படிமங்களும் கலவைப் படிம மாகிக் கவிதையைக் கவினுறச் செய்கின்றன.

பாலும் கசந்த தடீ!-- சகியே!

படுக்கை நொந்த தடீ!

கோலக் கிளிமொழியும்- செவியில் குத்த லெடுத்த தடி:

இதில் கசத்தல் சுவைப்புலப் படிமம்; படுக்கை நோதல் நொப்புலப் படிமம்: செவியில் குத்தல் எடுத்தலும் நொப்புலப் படிமமே கோலக் கிளிமொழி செவிப்புலப் படிமம். இவை கலவைநிலைப் படிமமாகச் சமைந்து கவிதைக்குப் பொலிவூட்டுவதைக் கண்டு மகிழ்க

கூடிப் பிரியரமலே-ஓரிராவெலாம்

தொஞ்சிக், குலவி யங்கே ** ஆடி விள்ையாடிய்ே-உன்றன் மேனியை, ஆயிரங் கோடிமுறை x நாடித் தழுவிமனக்-குறைதீர்ந்துநான்

நல்ல களியெய்தியே. . பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணியதில்லை வடி:

25. டிெ 4.52 : 243, 244. 26. கண்ணம்மா- என் குழந்தை- 2. 27. கண்ணம்மா-என் கிர்த்லன் - (1)-4. 28. கண்னம்மா-என் காதலி-(5)- கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/203&oldid=681232" இலிருந்து மீள்விக்கப்பட்டது