பக்கம்:பாரதீயம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாரதீயம்

இதில் கொஞ்சிக் குலவுதல், நாடித் தழுவுதல் நொப்புலப் படிமங்கள்; ஆடுதல், வியைாடுதல் இயக்கப்புலப் படிமங்கள்; பாடிப் பரவசப் படுதல், செவிப்புலப் படிமம். இவை கலந்த கலவை நில்ைப் படிமம் பாட்டில் பொலிந்து நிற்பதைக் கண்டு களிப்பெய்துக.

பிற பாடல்களிலும் கலவைநிலைப் படிமங்கள் தென்படுகின் றன.

சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிடுவோம்??

இதில் சிந்து நதி, நிலவு, இளம் பெண்கள், தோணிகள் கட்புலப் படிமங்கள்; பாட்டிசைத்தல் செவிப்புலப் படிமம்; ஒட்டி விளை யாடுதல் இயக்கப்புலப்படிமம். இவை கலவை நிலைப் படிமமாகிப்படிப் போரைப் பாட்டதுடவக் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதைக் காண்க.

தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்

தெய்விக நன்மணம் வீசும்

தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்

தேக்கி நடிப்பாள் எம்.அன்னை:

இப்பாடலில் சோலை, மாமலர், அன்னை இவை கட்புலப் படி

மங்கள், தீஞ்சொல், தேன், மது இவை சுவைப்புலப் படிமங்கள்;

iன்மணம் நாற்றப்புலப் படிமம் சொரிதல், நடித்தல் இவை இயக்கப்புலப் படிமங்கள். இவை யாவும் ஒன்று சேர்ந்து அன்னையை அற்புதமாகக் காட்டுகின்றன.

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகின்றேன் தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து கடர்மயமாம் விந்தையினை ஒதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?

இப்பாடற் பகுதியில் பாடுதல், ஒதிப் புகழ்தல் செவிப்புலப் படிமங்கள்: உருக்குதல், பரப்புதல் இவை இயக்கப்புலப் படிமங்கள்; தங்கம், வான்வெளி, சோதி, சுடர் இவை கட்டிலப் படிமங்கள்; தழல்குறைத் தல் நொப்புலப் படிமம்: தேனாக்குதல் சுவைப்புலப் படிமம். இந்த

29. தே.கி. பாரத தேசம்- 5. 30. ைவெறி கொண்ட தாய்-3. 31. குயில் பர்ட்டு-அடி 30-34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/204&oldid=681233" இலிருந்து மீள்விக்கப்பட்டது