பக்கம்:பாரதீயம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாரதீயம்

வாழ்க்கையோர் கனவு, பாகார்ந்த தேமொழியாள், செந்தீ பாங்கிடு மோர் விழியுடையாள், பாகான தமிழ், தேனான உயிர், தேனனைய பராசக்தி, ஞானகங்கை, மான்மானும் விழியுடையாள், குவலயத் தின் விழி, ஞானத்தோணி-இவை சுயசரிதை என்ற பகுதியில் திகழ்பவை.

ஆமெனும் பொருளனைத்தாய் (பிரும்மம்), போதமெனும் நாசியினாள், சீரியல் மதிமுகத்தார், கண்ணைப் பறிக்கும் அழகுடை யார், வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ, சீதக் குவள்ை விழியினான், கஞ்சமலரிற் கடவுள் வியப்ப, மதுரமொழியில் குசலங் லங்கள் பேசி, மகன் புலைமையும் தந்தையின் புலைமைகளும் யாரிடம் அவிழ்க்கின்றார், குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போல, திருவுளத்தின் ஆக்கினை, சேலைப்போல் விழியர்ள், மின் வட்டின் வயிரக் கால்கள், எள்ளும் விழற்கிடமின்றி, மதியினும் விதி பெரிது, அம்பினொத்த விழியாள், ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார், புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வதுபோல், பேய் கண்ட பிள்ளையென, ஆடிவிலைப்பட்ட தாதி, நெட்டைமரங் களென நின்று புலம்பினார், மின்செய் கதிர்விழி, பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள், அம்புபட்ட மான்போல், வம்பு மலர்க் கூந்தல், சினமான தி அறிவைப் புகைத்தலாலே,- இவை பாஞ்சாலி சபதத்தில் காணப்பெறுபவை.

பொன்னவிர்மேனி, தீபத்திலே விழும் பூச்சிகள்போல, பொன் னிறப் பெண்கள், சிங்காரப்பாட்டு, முல்லை மென்கை மாதர், வெறும் வாய் மெல்லும் கிழவி, மூடர்தம் பொய்மைக் கூடை, விண்ணையளக்கும் அறிவு, பிள்ளைக் கணியமுது, பேசும் பொற் சித்திரம், ஆடி வருந்தேன், முல்லைச் சிரிப்பு, துரண்டிற் புழு, கூண்டுக் கிளி, திக்குத் தெரியாத காடு, மொந்தைப் பழைய கள், சுட்டும் விழிச்சுடர், நட்டநடுநிசி, வான வளையம், வல்லிஇடை, ஆன்சமது; முல்லைநிகர் புன்னகை, ஒன்பது வாயில்குடில்உஇவை கண்ணன் பாட்டில் காணப்படும் படிமங்கள்.

கன்னல் சுவை, வானத்து மோகினியாள், இன்னிசைத் தீம் பாடல், மோகனப் பாட்டு, கலகலவேனும் ஓசை, உள்ளம்ாம் வீணை, மைக்குயிலி, நெருப்புச் சுவைக்குரல், ஆசை ததும்புதல், தெரித்து விட்டார் கேள்விகளை, மண் டு துயர், வீரத் திருவால், சல்லித்துளிப் பறவை, நிலையறியாப் பொய்ம்மை, இழித்த புலைப் பாட்டு, முந்தும் அழகு, பிச்சைச் சிறுக்கி, நீரோடும் மேனி, நெருப்போடும் கண், மூண்டு வரும் இன்பவெறி, நறுங்கள்ளிதழ்,- இவை குயில் பாட்டில் வருபவை. ----- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/206&oldid=681235" இலிருந்து மீள்விக்கப்பட்டது