பக்கம்:பாரதீயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 5

கொடி’ என்ற பாடல் இந்திய மொழிகளனைத்திலும் பெயர்க்கப் பெற்று, எங்கும் இசை ஏற்றம் பெறுதல் வேண்டும் : மைய அரசு இதில் முயற்சி எடுத்துச் செயற்பட வேண்டும்.

காட்டுப்பற்றை மக்கட்கு ஊட்டும் முறையில் பல பாடல்கள்

அமைந்துள்ளன மக்களிடையே விடுதலையுணர்ச்சியை எழுப்புவதில் இவை பெரும் பங்கு கொள்கின்றன. முதலில் காட்டின் பழம் பெருமையைப் பேசி இந்த உணர்ச்சியை எழுப்ப முனைகின்றார் கவிஞர்.

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

பாரத காடு.’ என்று பல்லவியாகத் தொடங்கித் தோடிப் பண்ணில் இசையை எழுப்புகின்றார். ஞானத்திலும், பரமோனத்திலும், கானத்திலும், வீரத்திலும், கெஞ்சில் ஈரத்திலும், கன்மையிலும், உடல் வன்மை யிலும், ஆக்கத்திலும், தொழில் ஊக்கத்திலும், உயர் கோக்கத்திலும், வண்மையிலும், உளத் திண்மையிலும் துண்மையிலும், உண்மை யிலும் உயர்ந்த காடல்லவா? வரலாற்றறிஞர்களும் பிறந்த நாள் அறியமாட்டாத பழந்தாப் என்று கூறுபவர்,

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

குழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம்.எங்கள் தாய்.” என்று பெருமையுடன் பேசிக் களிக்கின்றார். இன்னும்,

மாரத வீரர் மலிந்தகன் னாடு

மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு நாரத கான கலந்திகழ் நாடு

நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தகன் னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே

பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே.”

என்று பாடிப் பரவி நம்மிடம் காட்டுப்பற்றை ஊட்டுகின்றார். இத் தகைய காட்டுக்கு, .

i 1. தே.கீ : 4. பாரத நாடு-1. 12. டிை எங்கள் தாய்-1 13. டிை எங்கள் நாடு-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/21&oldid=681239" இலிருந்து மீள்விக்கப்பட்டது