பக்கம்:பாரதீயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 பாரதீயம்

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய

தீவு பலவினும் சென்றேறி-அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-கின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு.?? என்று கீழ்த்திசை வெற்றிகளையும், -

விண்ணை பிடிக்கும் தலையிமயம்-எனும்

வெற்பை படிக்கும்திறனுடையார்-சமச் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்

பார்த்திவர் ன்ேற தமிழ்நாடு.”* என்று வடதிசை வெற்றிகளையும் சுட்டிக் காட்டுவார். பாரத காட்டுணர்வையுடைய கவிஞர் இமய வெற்றியையும் கலிங்க வெற்றியையும் ஒதுக்கிவிடாது கூறுதல் குறிப்பிடத்தக்கது. இந்திய காட்டுணர்விலும் தமிழகத்தின் சிறப்பு கலந்தே மிளிர்கின்றது. மேலும்,

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு* என்று சீனம், மிசிரம், யவனம் முதலிய மேற்றிசை காடுகளில் புகழ் பசப்பிய தமிழ்நாடு என்று பெருமிதத்துடன் பேசுகின்றார். இங்ஙனம் பழம் பெருமைகளையெல்லாம் பேசி எங்கள் தங்தையர் காடென்ற பேச்சினிலே’ ஒரு விடுதலை ஆற்றல் பிறக்க வேண்டும் என்று விழைகின்றார் ; பேரவாக் கொள்ளுகின்றார்.

வள்ளுவன்பற்றி இவர்தம் புகழ் மாலை ஒப்புயர்வற்றது, திருவள்ளுவமாலையில் உள்ள ஐம்பத்து மூன்று பாராட்டுரைகளும் இவருடைய,

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதக்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.: என்ற பாராட்டுரைக்கு ஈடு சொல்ல முடியாது. வள்ளுவன் தமிழ் காட்டின் கொடைப்பொருள் என்று மொழியோடும் காட்டோடும் வைத்துப் புகழ்ந்த கவிஞர் இவர் ஒருவரேயாவர். இந்த மாபெரும் புலவனை உலகிற்கு ஈந்து தமிழ்நாடு பெற்றது. வான் புகழாகும். இங்ஙனம் புகழ் வாணிகம் நடத்திய பாரதீயம் தனிப்பெரும் சிறப்புடையது : ஒப்பற்ற புதுமைப் போக்கைக் கொண்டது.

28. தே.கீ. செந்தமிழ் நாடு-8 29. - -9 3, - 6 10 31. ை செந்தமிழ் நாடு-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/26&oldid=681252" இலிருந்து மீள்விக்கப்பட்டது