பக்கம்:பாரதீயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 11

காட்டுப்பற்றைப்போல் தமிழ்மொழிப்பற்றும் பாரதியாரிடம் மிக்கிருந்தது. பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்று பறை சாற்றியதைப் போலவே, தாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிய மொழியை எங்கும் கண்டதில்லை என்று வீறு பேசு கின்றார்.’’ தமிழைப்பற்றி இவர் இயற்றிய நான்கு பாடல்களும் தமிழர்களால் பொன்னேபோல் போற்றப்பட வேண்டியவை. அவற்றில் உணர்த்தப்பெறும் செய்திகளை உணர்ந்து உணர்ந்து தமிழர்கள் வீறு கொண்டெழுதல் வேண்டும்; மொழியை வளப்படுத்த வேண்டும். இலக்கியச் செல்வத்தை, கலைச்செல்வத்தைப் பெருக்கு தல் வேண்டும்.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே :-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா.”* என்று தமிழின் உயர்வைச் சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் படியச்செய்ததிலிருந்து இவர்தம் மொழிப் பற்றை கன்கு அறிய முடிகின்றது,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை ;

உண்மை,வெறும் புகழ்ச்சி இல்லை.” என்று மொழியின் பெருமையை, இலக்கிய வளத்தின் சிறப்பை முரசு கொட்டி முழக்குவர்.

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.” என்று தமிழ்த்தாயின் வாயில் வைத்தே தமிழின் தெய்வப் பிறப்பை எடுத்துரைப்பார்; இலக்கணத்தின் பழமையையும் பகர்வார். தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் தீஞ்சுவைக் காவியங்களைச் செய்து தந்ததை யும் நம் திருச்செவி சாற்றுவார். -

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்றன்

காதில் விழுந்த திசைமொழி எல்லாம் என்னென்ன வோபெயருண்டு-பின்னர்

யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்! “ 32. தே. கீ. தமிழ்-1 33. ப. பா, பாப்பாப் பாட்டு-12 34. தே.கி. தமிழ்-2 35. ைதமிழ்த் தாய்-1 36. டிை டிை-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/27&oldid=681253" இலிருந்து மீள்விக்கப்பட்டது