பக்கம்:பாரதீயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 15

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று.”

என்று நாடு விடுதலையடைவதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரே பாடினார்.

கம்பத்தின் கீழ்கிற்றல் காணிர் - எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரியர்அவ் வீரர் ; - தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர். சி. என்று மூவண்ணக் கொடியின் பெருமையையும், அதனைக் காத்து கிற்கும் வீரரின் சிறப்பையும் காடு விடுதலையடைவதற்கு முன்னரே பாடிச் சென்றார்.

இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே.” என்றும்,

ஊதுமினோ வெற்றி :

ஒலிமினோ வாழ்த்தொலிகள்

வேதனைகள் இனிவேண்டா

விடுதலையோ திண்னமே. ே என்றும்,

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-காம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு: என்றும் முன்னரே கூறிச் சென்ற கவிஞரின் வருவதுரைக்கும் திறன் நம்மை இறும்பூது எய்தச் செய்கின்றது. பெண் கல்வி பற்றி,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாப்ந்துவிட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.கே. என்று பின்னர் அமையும் நிலையை முன்னரே கூறிய கவிஞனின் புலமை வீறு போற்றற்குரியதன்றோ? இவண் காட்டிய கூற்றுகளில்

47. தே.கீ. -- சுதந்திரப் பள்ளு-பல்லவி 48. டிை தாயின் மணிக்கொடி - 4, 49. டிை விடுதலை - 2 - 50. ைபாரத மாதா கவரத்தின மாலை - 5 51. டிை சுதந்திரப் பள்ளு - 2 52. ப. பா. பெண்கள் விடுதலைக் கும்மி - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/31&oldid=681258" இலிருந்து மீள்விக்கப்பட்டது