பக்கம்:பாரதீயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இலக்கியக் கொள்கைகள்

தோற்றுவாய் : பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மாபெருங் கவிஞர். பாமர மக்களும் குறைவான கல்வி பெற்றவர் களும் இலக்கியத்தைச் சுவைக்க முடியும் என்ற கொள்கைக்கு வழியமைத்துத் தந்தவர். - .

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதி மிக்க . நவகவிதை, எந்நாளும் அழியாத

மாகவிதை” என்று நன்கு: எண்ணற்ற புதுமையான கவிதைகளைத் தமிழுலகுக்கு அளித்தவர். இதனைத் தெளிவாக அறிவிக்கும் முறையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யவர்கள் ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா..? ன்ன்று பட்டிக்காட்டான் ஒருவன் வாயில்வைத்துப் பேசிப் போக்தார்.

ஒரு காலத்தில், கல்விச் செருக்குடைய கற்றறிந்த புலவர்கள் மட்டிலுமே கவிதைச் சுவையை அநுபவிக்க முடியும் என்ற கொள்கை கிலவி வந்தது. அதனைச் சமயச் சான்றோர்கள் பக்தியைச் சாதன மாகக்கொண்டு ஓரளவு தகர்த்தெறிந்தனர். மணிவாசகப் பெரு மான், தேவார மணிகள் வா SS S SSAAAASSSS S S

மனநிலைக்கே க்திபேர்கவிதை ாமீது சிந்து கிற்கும், பாரதியர் தமிழ் உலகிற்கு ஒரு புதிய பேரொளியையும், ஆற்ற லையும், தற்காலச் சுவையையும் தேடி அளித்தார். தற்கால இளமை ததும்பும் நாகரிகத்தின் கலைப்போக்கையும் கருத்துப்போக்கையும் சுவையுறக் கலந்து பாமாலைகள் சூட்டித் தமிழன்னையைக் களிப் புறச் செய்தார். தமிழ்க்கவிதையின் நறுமணம் வாடிப்போப் செய்யுள்களை இயற்றுவதைச் செப்பிடுவித்தையைச் செய்வது போல் பயின்று, ஏட்டுக் கற்பனையை வைத்துக்கொண்டு, சத்தும் தற்காலப் பண்புமற்ற கவிதையை அளவுகோல்களால் ஆக்கும் மெய்ப் புலமையற்ற தமிழ்ப்புலவர்கள் திண்டாடிக்கொண்; ருந்த காலத்தில் பாரதியார் உண்மைக் கவிதையின் ஒளியைத் தமிழகம் கான்ச் செய்தார்.

1. த. பா. வேங்கடேசரெட்டப்ப பூபதி-(2) 3.

2. மலரும் மாலையும் பாரதியும் பட்டிக்காட்டானும்.

பா-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/33&oldid=681260" இலிருந்து மீள்விக்கப்பட்டது