பக்கம்:பாரதீயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாரதீயம்

தானாகப் பிறக்கும் கவிதையின் குணங்கள் காலத்தால் மாறுபாடு எப்துவதில்லை. கவிதையின் உறுப்புகளும், அவற்றின் குறிக்கோள்களும், பாடப்பெறும் பொருள்களும் காலத்திற்கேற்ற வ:தும், கவிஞர்களின் படைப்பாற்றலுக்கேற்றவாறும், மக்களின் கலைச்சுவைக்குத் தக்கவாறும் மாறுகின்றன. இவை கவிதைக்குக் கால-தேசகர்களிக-வர்த்தமானங்களை அதுசரித்த கூறுகளாக அமை கின்றன. கிரக்தரமான கூறில் கவிதை இசையுடன் ஒளிரும் கற்பனையின் சொற்கோவை : கருத்தாலும் சொல்லாலும் இயற் கையின் எழிலைப் பிழிந்தெடுக்கும் சக்தியின் கீதம்; இந்த அகிலத்தின் எல்லையற்ற எழிலிலும் சோதியிலும் கவிஞர்களின் உள்ளத்தை மூழ்கிக் குளிப்பாட்டும் ஆவியின் மலர்ச்சி; இந்தப் பண்புகளை எல்லாக் காலத்தில் தோன்றிய மாபெருங் கவிஞர் களிடையேயும் காணலாம். ஆனால், புதிய கற்பனை முறைகளையும் சந்தங்களையும், காலத்திற்கேற்ற குறிக்கோள் கருத்துகளையும், கைக்கொள்ளும் ஆற்றல் கவிஞர்கட்கு இன்றியமையாதது. தன் காலத்து ஆற்றல்களால் கவிஞன் ஒருவன் படைக்கப்பட்டபோதிலும், அலன் தன் காலத்திற்கு அப்பாற்பட்ட குறிக்கோள்களையும் படைக்கவல்லவன். இவற்றின் அடிப்படையில் பாரதியாரின் கவிதை களை ஆராய்ந்தால் அவர் பெருங்கவிஞர் என்பது தட்டுப்படும்.

இயற்கை எழில் : இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமசதியில் அடங்கிக் கிடக்கின்றன, அந்தச் சமாதியில் கலந்து கொள்ளும் இயல்புடையவனே கவிஞன். அவன் இயற்கையோடு பழகும் திறன் வாப்ந்தவன். இயற்கையை அவன் தழுவும் விதமே தனித்தன்மை வாய்ந்தது. உறங்குகின்ற குழந்தையைத் தாய் அதன் உறக்கம் கெடாமல் தழுவிக்கொண்டு தன்னை மறந்திருப்பதுபோலக் கவிஞனும் இயற்கையை அதன் இன்ப சமாதி கலையாமல் தழுவு, வான்; தன்னையும் உடனே மறந்துவிடுவான். இன்பப் பெருக்கில் மிதப்பான். அதிலிருந்து வெளிவந்தவுடன் பாடுவான். சில சமயம் ஆடவும் செய்வான். இந்த இன்ப நிலையிலிருந்துகொண்டு பாரதியார் பாடியுள்ள பாடல்கள் இயற்கை எழில்களைக் காட்டு கின்றன. பாடல்கள், தம்முடைய மந்திர ஆற்றலால் படிப்போரை சர்த்து அவற்றில் ஈடுபடச் செய்கின்றன. நாமும் கவிஞரைப் போலவே இயற்கையுடன் கலந்து, அதன் இன்பச்சமாதியில் மித்க்கத் தொடங்குகின்றோம்.

கானப் பறவை கலகலெனும் ஒசையிலும் காட்டு மரங்களிடைக் காட்டும் இசைகளிலும் ஆற்று ரோசை அருவி யொலியினிலும் லேப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/34&oldid=681261" இலிருந்து மீள்விக்கப்பட்டது