பக்கம்:பாரதீயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 19.

ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்னை மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வீனைமுதலாமனிதர் வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் கன்றொலிக்கும் பாட்டினிலும் கெஞ்சைப் பறிகொடுத்தேன்.”

இங்குக் கவிஞர் இயற்கையில் தோப்ந்து பாடுங்கால் நம்மையும் அதில் தோயவைத்துவிடுகின்றார்.

இயற்கையை அநுபவிக்குமாறு மனத்தைத் துண்டுவதை,

கிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் கேர்பட வைத்தாங்கே - குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோலவெறி படைத்தோம்; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும்

ஒட்டி மகிழ்க்திடுவோம்: என்ற பாடலில் காணலாம். காற்றினை நோக்கிப் பேசுகின்றார் கவிஞர் :

தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச்

செய்துவருங் காற்றே ! உன்னைக் குதிரைகொண் பேறித் திரியுமோர்

உள்ளம் படைத்துவிட்டோம். சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு

சேர்ந்திடு கற்காற்றே! மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமின்

வெட்டெர்லியேன்கொணர்ந்தாய் :

குயில் பாட்டு - 29-44.

பா. நிலாவும் வான்மீனும் காற்றும்-1

32. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/35&oldid=681262" இலிருந்து மீள்விக்கப்பட்டது