பக்கம்:பாரதீயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாரதீயம்

பெய்யும் பேய் மழையினை,

திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட'தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேப்கொண்டு தக்கை படிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட” என்று காட்டுவார். பாட்டைப் படிக்கும்போதே நம் மனம் காற்றும் மழையும் கலந்தடிப்பதைக் காண்கின்றது.

பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலைக் காட்டுவதைப் பாரடியோ என்று தொடங்கும் பகுதியின் முதல் ஐந்து கவிதை களில் கண்டு மகிழலாம். அவற்றுள்,

அடிவானத் த்ேஅங்கு பரிதிக் கோளம்

அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாப் : இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி

எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே

மொப்குழலாய், சுற்றுவதன் மொப்ம்பு காணாய்! வடிவான தொன்றாகக் தகடி ரண்டு

வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.” என்ற பாடல் அற்புதமானது. பராசக்தி காளிதேவி பத்துக்கோடி மின்னல்களைச் சேர்த்து உருக்கி, ஒருவட்டத் தகடுபோல் வார்த்து, அதனைக் கையில் ஏந்திச் சுழற்றும் காட்சியில் கம் மனம் ஆழப் பதி கின்றது. பாஞ்சாலியை அமைதியுடன் இக்காட்சியைக் காணுமாறு பணிக்கின்றான் பார்த்தன்.

அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே !

அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே சமையுமொரு பச்சைகிற வட்டங் காண்பாப்:

தானியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ? இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்

எண்ணிலா திடையிடையே எழுதல் காண்பாய்.

பாட்டைப் படிக்கும்போதே நம் மனத்திரையில் இக்காட்சி தென்படு கின்றது. இதன் விளக்கத்தை, –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/36&oldid=681263" இலிருந்து மீள்விக்கப்பட்டது