பக்கம்:பாரதீயம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 23

என்ற பாடலால் தெளிவுறலாம். கண்ணம்மா.என்.குழந்தை” என்ற பாடலில் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு’ என்று கவிஞரே தரும் குறிப்பு இதனை மேலும் தெளிவாக்குகின்றது. கண்ணன்.என்.தாய் என்ற பாடலிலும் தாய்’ என்பது பரா சக்தியையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

கல்விபந்றிய சிந்தனைகள் : கல்வியற்றிய சிந்தனைகளை இவர் பாடல்களில் காணலாம். கோயில்களை எழுப்புவதில் பெரும் பங்கு கொண்டத நம் நாடு. தற்கால வாழ்விற்குக் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதை கன்கு உணர்ந்தவர் இக்கவிஞர் பெருமான். எல்லா நிலைகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்றியமையாதவை என்பதை,

வீடு தோறும் கலையின் விளக்கம்

விதி தோறும் இரண்டொரு பள்ளி:

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்

நகர்களெங்கும் பலபல பள்ளி.ே

என்ற கவிதையில் புலப்படுத்துவர். வழிவழியாக முன்னோர் தேடி வைத்த அறிவுச் செல்வத்தைப் பின்னால் வரும் இளைஞர்கள் பெற்றுப் பயன்பெற வேண்டும், தம்மையும் உயர்த்தித் தாம் பிறந்த நாட்டையும் உயர்த்த வேண்டும் என்பது கவிஞர் கண்ட கனவு. வறுமையின் காரணமாக இளைஞன் ஒருவன் கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படக்கூடாது என்பதையும் சிந்தித்துள்ளார் கவிஞர். செல்வர்களும் அரசும் இதற்கு வழிவகை செய்தல் வேண்டும் என்பதை வற்புறுத்துவதுபோல்,

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம்பதி னாயிரம் காட்டல்: பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்விளங்கியொளிர கிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி .

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” என்று பேசுவர். அப்பொழுதுதான் தமிழகம் கல்வி சிறந் த தமிழ் நாடு’ என்று பழம்பெரும் புகழைகிலை நிறுத்தும் என்பது கவிஞரின் நீள்நோக்கு.

தோ. பா. வெள்ளைத் தாமரை-கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/39&oldid=681266" இலிருந்து மீள்விக்கப்பட்டது