பக்கம்:பாரதீயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பாரதீயம்

2

ஆங்கிலக் கல்விபற்றி இவர் கூறும் கண்டனக் கரு த்துகள் படக் கூறுவதாகவே தோன்றுகின்றன. காந்தியடிகள், ந்ேரு, இராஜாஜி போன்ற பெருந்தலைவர்கள் இம்முறைக் கல்வி பெற்ற வர்களே. இவர்கள் யாவரும் கெட்டா போனார்கள் : இம்முறைக் கல்வியின் விளைவுபற்றி,

செலவு தந்தைக்கோ ராயிரம் சென்றது:

தீதெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன: கலமோ ரெட்டுனை யும்கண்டி லேனிதை

காற்ப தாயிரம் கோவிலிற் சொல்லுவேன். ! என்று இவர் கூறும் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தக் கல்வி முறையை வார்தாக் கல்வி முறை'யாலும், இராஜாஜி கொண்டுவந்த குலமுறைக் கல்வியாலும் தகர்த்தெறிய முடிய வில்லை. அவைதாம் நம் நாட்டில் செல்லாக் காசாயின.

அறிவியற்கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல் வேண்டும் என்பது கவிஞரின் பேரவா.

பயிற்றிப் பலகல்வி தக்து-இந்தப்

பாரை உயர்த்திடல் வேண்டும். 8 என்று அறிவியல் கல்விக்கு ஆற்றுப்படுத்துகின்றார். தாய்மொழி மூலம் அக்கல்வி பெற வாய்ப்பு அமைக்கப்பெறுமானால் பருத்தி புடைவையாய்க் காய்த்தது போன்ற பலனை எதிர்பார்க்கலாம். விலைப்பாலைவிட முலைப்பால் சிறந் ததன்றோ ?

சென்றிடு வீர்எட்டுத் திக்கும்-கலை

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.19 என்றும்,

பிறகாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.” என்றும் யோசனை கூறுகின்றார்.

தொழிற்கல்வியற்றியும் சில கருத்துகள் இவர்தம் பாடல்களில் காணப்படுகின்றன. பல்வேறு தொழில்கள்மூலம் பல்வேறு

17. சுயசரிதை-29, 18. ப. பா. முரசு-30. 19. தே. கீ. தமிழ்த்தாய்-11. 20. ைதமிழ்-3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/40&oldid=681268" இலிருந்து மீள்விக்கப்பட்டது